பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 26 பட்டிருந்த காலையும் கையையும் உதறி அப்பால் தள்ளினாள். அது கிழவியின் கால் கைகள் போல இல்லாமல் யாரோ ஒரு புருஷருடையவைபோல இருந்தன. அவள்சடேரென்று எழுந்து உட்கார்ந்து, “பாட்டீ!பாட்டீ யார் இங்கே படுத்திருக்கிறது?” என்று வினாவிய வண்ணம், தான் எடுத்து வைத்திருந்த நெருப்புப்பெட்டியைத் திறந்து ஒரு குச்சி எடுத்துக் கிழித்துப் பக்கத்திலிருந்த விளக்கைப் பொருத்த அதன் பிரகாசம் அந்த அறை முழுதும் குபிரென்று பரவியது. பக்கத்திலிருந்த பாயில் பாட்டி காணப்படவில்லை. காஷாய வஸ்திரம் தரித்த ஒரு சாமியார் படுத்திருந்தார். விளக்கைக் கண்டவுடனே அவரும் எழுந்து உட்கார்ந்துகொண்டு, “ஷண்முகவடிவு அன்றைய தினம் என்னை நீ ஏமாற்றி விட்டு ஓடினவளல்லவா இன்றைய தினம் வசமாக நீயே இங்கே வந்து மாட்டிக் கொண்டாய். உன்னை நான் இனி விடுவேனென்று நினைக்காதே’ என்றார். அப்போது அந்த அறைக்கதவு வெளிப்புறத்தில் தாளிடப்பட்ட ஒசை கேட்டது. தன்னை அதற்குமுன் கலியாணசுந்தரம் எந்தச் சாமியாரிடத்திலிருந்து விடுவித்தானோ அதே சாமியார் அவ்விடத்திலும் இருக்கக் கண்ட நமது ஷண்முகவடிவு பிரமித்துக் கலங்கி அப்படியே நின்றுவிட்டாள்.

38-வது அதிகாரம்

வஞ்சகர் கூத்து

மகாராஷ்டிர மன்னர்களின் ஆதி உற்பத்திஸ்தானமும், பேஷ்வாக்கள் என்ற கீர்த்திபெற்ற ராஜப் பிரதிநிதிகளினது தலைமை நகரமுமான பூனாநகரம் நிரம்பவும் நேர்த்தியான பட்டணம். நமது கதை நிகழ்ந்த காலத்தில் அந்த நகரம் மகா அற்புதமான வனப்பு வாய்ந்து தேவேந்திர பட்டணம் போல விளங்கியது. தேவாலயங்கள், பிரம்மாலயங்கள், அரண்மனை, வீடுகள், உத்யானவனங்கள், தடாகங்கள், மாளிகைகள்,