பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 பூர்ணசந்திரோதயம்-4 விளையாட்டு இடங்கள், யானைச்சாலைகள், குதிரைச் சாலைகள், ஆயுதச் சாலைகள் முதலிய ஒவ்வோரங்கமும் எவ்விடத்தில் எப்படி அதியுன்னதமாக அமைந்திருக்க வேண்டும் என்பதை உலகத்தோர் பார்க்க விரும்பினால், அதை அவர்கள் பூனா நகரத்திலன்றி வேறு எவ்விடத்திலும் காண இயலாது. அவ்வாறு அது உலகத்திலுள்ள பட்டணங்களுக் கெல்லாம் ஒரு சட்டகம் போல ஒப்புயர்வற்ற தெய்வீகப் பட்டணமாக அமைந்திருந்தது. அந்தப் பட்டணத்தின் பொதுச் சத்திரம் ஒன்றில் ஒர் அறைக்குள் சன்னியாசிபோல உடை தரித்திருந்த ஒரு புருஷர் காணப்பட்டார். கழுத்து முதல் கணைக்கால் வரையில் தொங்க விடப்பட்டிருந்த பிரம்மாண்ட மான அங்கியால் அவரது உடம்பு முழுதும் மறைக்கப் பட்டிருந்தது. அவர் தமது தலையில் ஒரு காஷாய வஸ்திரத்தால் தலைப் பாகை கட்டி, அதன் நுனியை முதுகின்பக்கம் ஒரு சாணளவு தொங்கவிட்டிருந்தார். நெற்றியில் விபூதி, சந்தனம் ஆகிய இரண்டும் காணப்பட்டன. அவரது தோற்றம் படங்களில் காணப்படும் விவேகாநந்த சுவாமிகளின் தோற்றம் போல இருந்தது. ஆனால், அவரது உடம்பு தந்தத்தினால் ஆனதுபோல வெளுப்பாகவும், மினுமினுப்பாக வும் இருந்தது. முகத்தில் அழகான மீசைகள் காணப்பட்டன. உடம்பு ஆஜானுபாகுவாகப் பெருத்திருந்தது அன்றி, அவரது வயது சுமார் நாற்பது, அல்லது நாற்பத்தைந்திருக்கலாம் என்று தெரிவித்தது. அவரது மூக்கு, முழிகள், புருவங்கள், உதடுகள், கன்னங்கள் முதலிய ஒவ்வோரங்கமும் மிதமிஞ்சிய செழிப்பும், வனப்பும், வசீகரமும் வாய்ந்தவையாக இருந்தன. அவரது காஷாய வஸ்திரங்கள், அவர் உலகைத் துறந்த சன்னியாசி என்று வெளிப்படுத்தின. ஆனாலும், அவரிருந்த அறையில் சகலமான சுக போகங்களும் ஏராளமாக நிறைந்திருந்தன. எங்கும் வெள்ளிப் பாத்திரங்களும், தங்க சாமான்களுமே மயமாகக் காணப்பட்டன. ஆகையால், அவர் அபாரமானசம்பத்து வாய்ந்த பண்டார சன்னிதிகள், மடாதிபதிகள் முதலியோர் இடுப்பில்