பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 263 மாத்திரம் காஷாய வஸ்திரம் அணிந்து இரதகஜ துரகபதாதிகள் புடைசூழ தங்கப் பல்லக்கில் எப்படி பவனி வருகிறார்களோ, அப்படியே அந்த சன்னியாசியும் பணக்காரத் துறவியாகக் காணப்பட்டார்.

ஆனால், அந்த அறையில் அவரைத்தவிர வேறே மனிதர் யாரும் காணப்படவில்லை. அவர் மான்தோல் ஆசனத்தின்மீது உட்கார்ந்து, காஷாய வஸ்திரம் போர்த்த ஒரு திண்டின்மேல் சாய்ந்தவராய் உட்கார்ந்து, யாரோ ஒருவரது வருகையை எதிர்பாத்திருப்பவர் போலத் தமது விழியை வாசல் பக்கத்தில் வைத்தவராய் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். அரை நாழிகை சாவகாசம் கழிந்தது. ஒரு யெளவன புருஷர் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தார். அவருக்குச் சுமார் இருபது வயதிருக்கலாம். அவரும் நல்ல அழகான தேகமுடையவராகக் காணப்பட்டதன்றி, அந்தச் சன்னியாசியிடம் அதிக பயபக்தி விநயமுடையவராய் அவரது தவசிப்பிள்ளை போலக் காணப்பட்டார். அவர் பட்டனத்திற்குப் போய் மாதுரியமான பற்பல கனிவர்க்கங்களை வாங்கி ஒரு பெரிய மூட்டையாகக் கட்டிக் கொண்டு அங்கே வந்து சேர்ந்தார். சேர்ந்தவர் மூட்டையை அவிழ்த்துப் பழங்களையெல்லாம் ஒரு வெள்ளித் தட்டில் எடுத்துவைத்துவிட்டு, அவைகளில் சிலவற்றை எடுத்துத் தண்ணீர் விட்டு அலம்பி நறுக்கி இன்னொரு சிறிய தட்டில் வைத்து சன்னியாசிக்கு எதிரில் கொணர்ந்து வைத்துக் கொண்டு ஒவ்வொரு துண்டாக எடுத்து சன்னியாசியிடம் கொடுக்க, அவர் அதை வாயில் போட்டு மென்று தின்றவராய் மிகுந்த சந்தோஷத்தோடு ரகசியமாகப் பேசத் தொடங்கினார்.

சன்னியாசி:- என்னசாமளராவ்! சன்னியாசி வேஷம் எனக்கு எப்படிப் பலித்திருக்கிறது. பார்த்தாயா?

சாமளராவ்:- ஒ நிரம்பவும் நன்றாகப் பலித்திருக்கிறது. தத்ரூபம் அர்ச்சுன சன்னியாசி போலவே யிருக்கிறது.