பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 பூர்ணசந்திரோதயம்-4 முகத்தைப் பார்த்து, ‘என்னப்பா சங்கதி? கடிதத்தைப் போட்டாயா வீட்டின் விவரத்தை அறிந்துகொண்டாயா என்றார்.

சாமளராவ், “நான்போய் அந்த இலக்கமுள்ள வீட்டைக் கண்டுபிடித்தேன். அதன் வாசற் கதவு பூட்டப்பட்டிருக்கிறது. இருந்தபடி இருக்கட்டுமென்று நான் கடிதத்தை ஜன்னலின் வழியாக உள்ளே போட்டுவிட்டு வந்து பக்கத்து வீடுகளிலுள்ள மனிதர்களிடம் பேச்சுக்கொடுத்து அந்த வீடு யாருடையதென்று விசாரித்தேன். அந்த வீடு அரண்மனையைச்சேர்ந்த வீடென்றும், அரண்மனையிலிருந்து யாரோ சிலர் அடிக்கடி வந்து போய்க் கொண்டிருப்பதாகவும் சொன்னார்களே அன்றி அதற்குமேல், அதிக விவரமான செய்தி எதையும் சொல்லவில்லை’ என்றான்.

இளவரசர், ‘'சரி; அவன் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அதைப் பற்றி நமக்கு அக்கறையில்லை. நம்முடைய கடிதத்தை அவன் பார்த்து, சரியான மறுமொழி எழுதியனுப்பினால் அதுவே போதுமானது’ என்றார்.

சாமளராவ், ‘வீட்டின் கதவு பூட்டப்பட்டிருக்கிறது. அவன் இன்றையதினம் வந்து திறந்து பார்க்கிறானோ, அல்லது இன்னம் எத்தனை நாள்கள் கழித்துப் பார்க்கிறானோ. இதனால் நமக்கு அதிக காலதாமதம் ஆகுமோ என்னவோ!’ என்றான்.

இளவரசர், ‘வந்தது வந்துவிட்டோம். இனி எவ்வளவுதான் காலஹரணமானாலும், நாம் கவலைப்பட முடியுமா? வந்த காரியத்தை ஒருவிதமாக நிச்சயித்துக் கொண்டுதான் போக வேண்டும்” என்றார்.

அதன்பிறகு அவர்கள் இருவரும் வேறு பலவாறாக சம்பாவித்த வர்களாய் அவ்விடத்திலேயே இருந்தனர். சாமளராவ் அடிக்கடி வெளியில் போய்த் தங்களுக்குத் தேவையான ஆகாரங்களுக்கும் தின்பண்டங்களுக்கும் பெருத்த பெருத்த பணத்தொகைகள் செலவு செய்து மாதுரியமான