பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 பூர்ணசந்திரோதயம்-4 எங்கிருந்தோ என் உடம்புக்கு ஒருவித பலமும், மனதுக்கு ஒரு விதக் குதூகலமும் உண்டாகிவிடுகின்றன. நான் வேறே எந்தக் காரியம் செய்தாலும், உடனே அலுப்பு உண்டாகிவிடுகிறது. தினம் ஒரு தரம் இங்கே வந்து உன் முகத்தைப் பார்த்துவிட்டுப் போனலன்றி என் அலுப்பும் தாகவிடாயும் தணிகிறதே இல்லை என்று கிள்ளை மொழிவதுபோலக் கொஞ்சலாகவும்

இளக்கமாகவும் மொழிந்தாள்.

மோகனராவ்:- ஆகா! உன் வார்த்தை அழகுக்குத் தகுந்தபடி உன் முகத்தழகும், இந்த கர்ப்பம் முற்ற முற்ற எவ்வளவு சொகுசாக மாறிக் கொண்டு வந்திருக்கிறது தெரியுமா? உன் முகத்தில் இப்போது உண்டாகியிருக்கும் களையையும் வசீகரத்தையும் போல இதற்குமுன் எப்போதும் இருந்ததே யில்லை. பார்ப்பதற்குப் பதினாயிரம் கண் வேண்டும் போல இருக்கிறது. அதைப் பற்றி நான் அதிகமாகப் புகழ்ந்தால் என்னுடைய கண் திருஷ்டி தோஷமே பட்டுவிடுமென்று பயப்படுகிறேன்.

லலிதகுமாரி:- (ஒருவித சலிப்போடு) ஆம் என்ன முகம் வேண்டியிருக்கிறது. என்துரதிர்ஷ்டத்திற்கு முகம் ஒரு கேடா

மோகனராவ் :- (திரம் பவும் கவலையாகவும் வாஞ்சை யாகவும், ஏன் தங்கமே! அப்படி விரக்தியாகப் பேசுகிறாய்? இந்த உலகில் உனக்கென்ன குறையிருக்கிறது? மகாராஜாவின் வயிற்றில் பிறந்து சலக சுகபோகங்களையும் செல்வங்களையும் அனுபவிக்கும் நீ ஏன் இப்படி விசனிக்கிறாய்? நான் இருக்கையில் உனக்கு இப்படிப்பட்ட துயரம் ஏன் உண்டாக வேண்டும்? நீ எப்போதும் சந்தோஷமாகவும் ஆனந்தமாகவும் இருக்க வேண்டும். அதைப் பார்த்துக்கொண்டிருப்பதே எனக்குச் சொர்க்கம்போல இருக்குமென்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேனே. நீ இப்படி பேசுவது தர்மமா?

லலிதகுமாரி:- (ஆழ்ந்த பிரேமையோடு) மோகனராவ்! இப்போது என் மனம் படும்பாட்டை என்னவென்று