பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பூர்ணசந்திரோதயம்-4 தமக்காக நிறுத்தப்பட்டிருந்த நேர்த்தியான ஸாரட்டில் அமர்ந்து தஞ்சையை நோக்கி பவனி புறப்பட்டார். வெளிப் பார்வைக்கு நிரம்பவும் ஜெகஜ்ஜோதியாக அலங்கரிக்கப்பட்டிருந்த அவரது கிழட்டு உடம்பு மாத்திரம் வண்டியில் இருந்ததேயன்றி, அவரது மனமெல்லாம் தனது மாளிகையில் இருந்த பூங்கோதையான ஷண்முகவடிவின்மீது சென்று லயித்துப் போயிருந்தது. தாம் பிறந்த முதல் அப்படிப்பட்ட நிகரற்ற அழகும் கலியான குணங்களும் நிறைந்த உத்தம ஜாதி ஸ்திரீயைப் பார்த்ததே இல்லை என்ற உறுதி அவரது மனதில் ஏற்பட்டிருந்தது. தாம் அதுவரையில் பார்த்த ஸ்திரீகளுள் பூர்ணசந்திரோதயம் ஒருத்தியே சகலமான அம்சங்களிலும் ஷண்முகவடிவிற்குச் சமமாகச் சொல்லக் கூடியவளாகத் தோன்றினாலும், அந்த இரண்டு பெண்களுக்குள்ளும் முக்கியமான ஒரு வித்தியாசம் இருந்தது நன்றாக விளங்கியது. பூர்ணசந்திரோதயம் ஆழ்ந்த கபடமும், வாக்குவாதம் செய்வதில் எவரையும் வெல்லக்கூடிய திறமையும், ஆண்மையும், துணிவும் வாய்ந்தவளாகத் தோன்றினாள். ஷண்முகவடிவோநாணம் மடம் அச்சம் பயிர்ப்பு என்ற குணங்களே வடிவெடுத்தது போலவும், கபடம் என்பதே கலவாத சுத்தமான மனதும், அடங்கிய சொல்லும் மிருதுத்வமும் நிறைந்தவளாகவும் தோன்றினாள். பூர்ணசந்தி ரோதயத்தின் எண்ணங்கள், வார்த்தைகள், செய்கைகள் ஆகிய யாவும் தந்திரத்தையும் யுக்தியையும் வெளிப்படுத்தின. ஷண்முகவடிவினது நினைவுகளும், சொற்களும், காரியங்களும் பரிசுத்தத்தையும் நீதிநெறி வழுவாத மன உறுதியையும் எளிதில் புலப்படுத்தின. இருவரும் அன்னிய புருஷருடைய துர்ப் போதனைக்கு இணங்காத திடமனதுடைய ஸ்திரீகளாகத் தோன்றினாலும், பூர்ணசந்திரோதயம் லெளகீகமான மனப் பான்மை உடையவளாகவும், ஷண்முகவடிவு தெய்வீக குண முடையவளாகவும் தோன்றினர். பூர்ணசந்திரோதயத்தின் ஜாஜ் வல்யமான வடிவத்தை மனிதர் மனதால் பாவிக்கும் போதே, அவரது மனோ மெய்களெல்லாம் காமவிகாரத்தினால்