பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 பூர்ணசந்திரோதயம்-4 இருப்பது கடினமான விஷயம். ஆகையால், அந்த மனிதன் நினைப்பதெல்லாம் உடனே கிடைப்பதால், அவனது மனம் பழைய வஸ்துக்களை விட்டு எப்போதும் புதுப்புது வஸ்துவாக நாடிக்கொண்டே போகிறது. நான் மகாராஜாவின் மகளாகப் பிறக்காதிருந்தால், அப்படிப்பட்ட மனிதனைக் கல்யாணம் செய்து கொள்ளாமலிருக்கலாம் அல்லவா?- என்றாள்.

அந்த வார்த்தைகளைக் கேட்ட இளவரசரது தேகம் பறந்தது. கை கால்கள் பதறின. மீசைகள்துடித்தன. அவ்விடத்தை விட்டுத் தாம் எழுந்துபோய் ஒரே அடியில் அவளை வீழ்த்திவிட வேண்டுமென்ற எண்ணம் அவரது மனதில் தோன்றியது. அந்தச் சமயத்தில் சாமளராவ் அவரது கையைப்பிடித்து உள்ளே இழுத்து பொறுமையோடு இருக்கும்படி சைகை செய்தான். ஆதலால், அவர் ஸ்தம்பித்து அப்படியே உட்கார்ந்திருந்தார்.

மோகனராவ் : லலிதகுமாரி தஞ்சாவூர் இளவரசர் துன்மார்க்கமான வழிகளில் பிரவேசிக்கிறதைப் பற்றி நீ எவ்வளவுதான் விசனமடைந்தாலும், அதைப் பற்றி நான் முற்றிலும் சந்தோஷமே அடைவதன்றி, அதை ஒரு பெருத்த பாக்கியமாக நினைக்கிறேன். ஏனென்றால், அவர் அப்படி இருப்பதனால்தானே நீ விரக்தியடைந்து உன் ஆசையை எல்லாம் என்மேல் திருப்பினாய். இல்லாவிட்டால் உனக்கும் எனக்கும் இப்படிப்பட்ட அந்தரங்கமான பிரியமும் சிநேகமும் ஏற்படாதல்லவா? எனக்கும் உனக்கும் இப் படிப்பட்ட அன்னியோன்னியமான சிநேகம் ஏற்பட்டதைப் பற்றி நீ விசனப்பட மாட்டாயென்று நினைக்கிறேன்.

லலிதகுமாரி:- ஐயோ! உன்னுடைய சிநேகம் ஏற்பட்டதைப் பற்றி நான் எதற்காக விசனப்படுகிறேன். அந்த இளவரசன் என் வயிறெரிய நடந்துகொண்டதற்கு இதுதானே எனக்கு ஒரு பெரிய ஆறுதலாக ஏற்பட்டது. இல்லாவிட்டால், நான் இந்நேரம் அதே விசனத்தில் ஆழ்ந்து எப்படியாவது தற்கொலை செய்துகொண்டு இறந்துபோயிருப்பேனே! இப்போது உன்னுடைய சிநேகம்