பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 பூர்ணசந்திரோதயம்-4

மோகனராவ்:- (உண்மையான அனுதாபமும் இரக்கமும், தோன்ற) ஆம். அந்த விஷயம் நிரம் பவும் சங்கடமான விஷயந்தான். அதைப்பற்றி நானும் நினைத்து சஞ்சலப் பட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். இந்தக் குழந்தை பிறந்த பிறகு இதை நான் ஒரு நாளாவது பார்க்கக் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற ஏக்கமும் என் மனசில் இப்போதே தோன்றிவிட்டது. ஆனால், ஒரு சந்தேகம். இந்தத் தாதிப் பெண்கள் இருக்கிறார்களே! இவர்கள் நீயும் நானும் சிநேகமாக இருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொண்டிருக்கிறார்களா? அவர்கள் குழந்தையை ஒரு தடவையாவது எனக்குக் காட்டுவார்களா?

லலிதகுமாரி:- ஆகா! உன்னுடைய குழந்தையை உனக்குக் காட்டாமலா இருக்கப் போகிறார்கள்! நானும் வெகுநாள் வரையில் இந்த கர்ப்பத்தை மறைத்து மறைத்துப் பார்த்தேன். இந்த ஊரிலுள்ளதாதிகளுக்குத் தெரிந்தால் இவர்கள்சங்கதியைத் தங்களுடைய மனிதருக்கு எப்படியும் வெளியிட்டு விடுவார்க ளென்றும், அது எப்படியும் வெளிப்பட்டுப் போகுமென்றும் நினைத்தே தஞ்சாவூரிலிருந்து இவர்களை வரவழைத்து, எனக்குப் பக்கத்தில் இவர்கள் மாத்திரமே இருக்க வேண்டுமென்று நான் ஏற்பாடு செய்தேன். இவர்கள் மகா யூகஸ்தர்கள். ஆகையால், என்னுடைய ரகசியத்தை வெகு சுலபத்தில் கண்டுகொண்டு சூட்சுமமான சில கேள்விகளைக் கேட்கத் தலைப்பட்டனர். அதன்மேல், நான் விஷயங்களை இவர்களிடம் வெளியிட நேர்ந்தது. எப்படியாவது நான் சில மனிதரிடத்தில் இதை வெளியிட்டாலன்றி, இது சம்பந்தமான ஏற்பாடுகளையெல்லாம் யார் செய்வார்கள்? ஆகையால், நான் சொல்லுமுன் அவர்களே இதைக் கண்டுபிடித்துக் கொண்டதால், நான் சொல்லும்படியான அவமானமும் எனக்கு மிச்சமாயிற்று. இந்தத் தாதிகள் முதலில் இந்த கர்ப்ப விஷயத்தைத் தெரிந்து கொண்டு, மற்ற விவரங்களைக் கேட்க பயந்து பேசாம