பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 25 நெக்குவிட்டுத்தளர்ந்து நிலைகுலைந்து சின்னாபின்னப்பட்டுப் போவது நிச்சயம். ஷண்முகவடிவை மனதால் நினைக்கும் போதே அவளிடத்தில் ஒருவித மேலான பக்தியும், மரியாதை யும் அவளை சரஸ்வதி லக்ஷ்மி முதலிய தெய்வங்களை வைத்து வணங்குவது போல வழிபட்டுப் பூஜித்து வாயார ஸ்தோத்திரம் செய்தாலும், அத்தனைக்கும் அவள் அருகமானவள் என்ற எண்ணமும் உதிக்கும். பூர்ணசந்திரோதயம் ராஜஸ் குணம் நிறைந்தவளாகக் காணப்பட்டாள். ஷண்முகவடிவோ சாத்வீக குணமே வடிவெடுத்தவள் போல இருந்தாள். எத்தகைய மேம்பாடும் புத்தி விசேஷமும் அதிகாரமும் வாய்ந்த புருஷரானாலும் பூர்ணசந்திரோதயத்தண்டை நெருங்கிப் பழகுவார்களானால், தமக்குத்தாமே சிறுமையடைந்து குன்றிப்போய்த் தம்மிலும் அவளே மேம்பட்டவள் என்றும், அவள் எஜமானியாக இருந்து தம்மை அதிகாரம் செய்யத் தகுந்தவள் என்றும், அவரது மனதில் ஒருவித எண்ணமும் கிலேசமும் தோன்றி அவரைக் குன்றச் செய்யும். ஆனால், ஷண்முகவடிவினிடம் பழகும்போது அப்படிப்பட்ட கிலேச மாவது அச்சமாவது உண்டாகாமல், அவளுக்கு அற்ப கெடுதலும் நேராமல் காப்பாற்ற வேண்டுமென்ற அனுதாபமும், பார்க்கப் பார்க்க அதிகரிக்கும் மதிப்பும், அவளைச் சதா சர்வதாகாலமும் புகழ்ந்தாலும் தெவிட்டாத ஆர்வமும் மனப்பாசமும் பெருக்கெடுத்தன. ஆகவே மருங்காபுரி ஜெமீந்தாரினது மனம் பூர்ணசந்திரோதயத்தை நாடியதை விடப் பதினாயிரமடங்கு அதிக உரமாக ஷண்முகவடிவை நாடியது. தாமும் இளவரசரும் மற்றும் நால்வரும், சேர்ந்து பூர்ணசந்திரோயத்தை வெல்வதற்காகப் பந்தயம் வைத்ததில், அவள் தமக்கு வாய்க்காமல் போனது தெய்வச் செயலாகத்தான் இருக்க வேண்டுமென்று ஜெமீந்தார் நினைத்தார். அவளைக் காட்டிலும் ஷண்முகவடிவு சகலமான அம்சங்களிலும் சம்பூர்ண சிருஷ்டியாக அமைந்தவள் ஆதலால், அவளைக் கொணர்ந்து தமக்குச் சேர்த்து வைத்துவிட வேண்டுமென்ற கருத்தோடுதான்