பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39-வது அதிகாரம் லீலாவதியும் நீலமேகம் பிள்ளையும்

லீலாவதியின் கை கால்களை எல்லாம் கட்டி மார்பின் மீது சார்த்திக்கொண்டு, திரவிய மூட்டையைக் கையில் பிடித்துக் கொண்டு மருங்காபுரி ஜெமீந்தாரினது மாளிகையைவிட்டு வெளிப்பட்ட கட்டாரித்தேவன் அதிக விரைவாக நடந்து செல்லத் தொடங்கினான். முக்கியமான பெரிய ராஜ வீதியின் வழியாகத் தான் செல்வது நிரம்பவும் அபாயகரமானதென்று நினைத்த கட்டாரித்தேவன் இருண்டிருந்த சிறிய சந்துக்களில் நுழைந்து வாயுவேக மனோவேகமாகப் பாய்ந்து போய்க் கொண்டிருந்தான். அப்போது லீலாவதியின் மனநிலைமை எப்படி இருந்தது என்பதை நாம் சிறிது கவனிப்போம். அவள் தனது பெரிய தந்தையின் சொல்லை மீறமாட்டாதவளாய்த் தன் மனதிற்கு விரோதமாக, ஷண்முகவடிவை வஞ்சித்து, இருளில் ரதிகேளி விலாசத்திற்குள் அழைத்துக்கொண்டுபோய் விசை வைத்த நாற்காலியில் மாட்டிவிட்டு வந்தாள். ஆனாலும், அவளது மனதில் ஒருவித இரக்கமும், திகிலும், அனுதாபமும் எழுந்து பெருகிக்கொண்டே இருந்தன. யாதொரு குற்றமுமற்ற மகா சுத்தமான மனுஷியான அந்த யெளவன ஸ்திரீயின் விஷயத்தில் தான் அப்படிப்பட்ட அட்டுழியமான வஞ்சகம் புரிந்துவிட்டதைப் பற்றி அவள் எண்ணிஎண்ணித் தன்னைத் தானே இகழ்ந்து கண்டித்துக் கொண்டிருந்தாள். அப்போது, அவ்விடத்திலிருந்த மருங்காபுரி ஜெமீந்தார் பக்கத்திலிருந்த கதவண்டை இருக்கும் படியும், அவசியம் நேருமானால், உள்ளே வந்து தமக்கு உதவி செய்யும்படியும் அவளிடம் சொல்லி அவளை அவ்விடத்தில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். அதன்பிறகு உட்புறத்தில் ஜெமீந்தாருக்கும், ஷண்முகவடி விற்கும் நடந்த சச்சரவையும் சம்பாஷணையையும் லீலாவதி