பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29O. பூர்ணசந்திரோதயம்-4 கேட்டுக் கொண்டே கதவின் பக்கத்தில் மறைந்து நின்று கொண்டிருந்தாள். கடைசியில் நல்ல தருணத்தில் கட்டாரித்தேவன் வெளிப்பட்டு ஷண்முகவடிவை விடுத்து, மருங்காபுரி ஜெமீந்தாரை நாற்காலியில் மாட்டியதைக் கண்டவுடனே, லீலாவதி முற்றிலும் பிரமிப்பும் திகிலும் குலை நடுக்கமும் கலக்கமும் மயக்கமும் அடைந்து, அப்போது ஒருவேளை ஏராளமான கொள்ளைக்காரர்கள் வந்து தமது மாளிகைக்குள் நுழைந்துகொண்டிருப்பார்கள் என்றும், தான் அவ்விடத்தைவிட்டுக் கீழே சென்றால் அவர்கள் குறுக்கிட்டுத் தன்னைப் பிடித்துக்கொள்வார்களோ என்றும் நினைத்து அவ்விடத்திலேயே சுவரோடு சுவராக ஒன்றி மறைந்து கொண்டிருந்தாள். கட்டாரித்தேவனை அவள் அண்ணாசாமி நாயக்கன் என்ற பெயரினால் அறிவாளே அன்றி கட்டாரித் தேவன் என்ற பெயரால் அறிந்தவளன்று. அதுவுமன்றி, கட்டாரித்தேவன் அன்றைய தினம் காலையில் தமது மாளிகைக்குள் வந்து தன்னோடு பேசிவிட்டுத் தானும் இன்ஸ்பெக்டரும் பேசியதை மறைந்து கேட்டான் என்பதையும், அதன்பிறகு அந்த மாளிகைக்குள்ளேயே ஒளிந்து கொண்டி ருக்கிறான் என்பதையும் அவள் அறியாதவள். ஆதலால், அப்போது திடீரென்று தோன்றி ஜெமீந்தாரை நாற்காலியில் மாட்டி வைத்தவன் கட்டாரித்தேவனாகத்தான் இருக்க வேண்டுமென்று அவள் சிறிதும் சந்தேகிக்கவே இல்லை. அவன் தற்செயலாக வந்த யாரோ ஒரு திருடன் என்று நினைத்து நிரம் பவும் கிலி கொண்டு ஸ்தம் பித்து மெளனமாக நின்றுவிட்டாள். தான் இறங்கிப் போய்க் கூச்சலிட்டு வேலைக்காரர்களை எழுப்ப வேண்டுமென்ற எண்ணம் அவளது மனதில் தோன்றியது. ஆனாலும், எவ் வித்தில் எந்தத் திருடன் மறைந்திருந்து தன்னைப் பிடித்துக் கொள்வானோ என்ற அச்சம் அவளது காலை நிரம் பவும் கெட்டியாகத் தரையோடு தரையாக அழுத்திப் பிடித்துக் கொண்டே இருந்தது. சிறிது நேரத்தில் கட்டாரித் தேவன்