பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பூர்ணசந்திரோதயம் - 4 கடவுள் அவ்வாறு சூழ்ச்சி செய்திருக்கிறார் என்ற உறுதியான எண்ணம் கிழவரது மனதில் தோன்றியது. பூர்ணசந்திரோதயம் தமக்குக் கிடைத்திருப்பாளானால், அவள் அடங்காப்பிடாரியாக தம்மைக் கட்டி மேய்த்து சூத்திரப்பாவைபோல ஆட்டிவைத்து விடுவாள் என்ற பெரும் பீதியும் ஷண்முகவடிவோ சகல விதத்திலும் தமக்கு அடங்கிப் பணிவாக நடந்து சகல விஷயங்களிலும் மனதிற்கு ஒத்தபடி ஒழுகுவாள் என்ற நினைவும் தோன்றின. ஆகையால், தாம் எப்பாடு பட்டாகிலும் ஷண்முகவடிவைத் தமக்கு உரியவள் ஆக்கி, எப்போதும் அவளைத் தம்மோடு கூடவே வைத்துக் கொள்ள வேண்டு மென்ற உறுதியானதீர்மானம் ஏற்பட்டுவிட்டது. அவளது மனம் முழுதும் வேறொரு யெளவனப் புருஷன் மீது சென்று லயித்திருப்பது பற்றி அவளைத் தாம் சாதாரண வழியில்

வசப்படுத்தி அவளது பிரியத்தைச் சம் பாதித்துக் கொள்ள முடியாது ஆகையால், தாம் தந்திரமும் பலாத்காரமும் செய்தே அவளை வசப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது. அன்றைய இரவு கழிவதற்குள் தாம்

எப்படியும் அவளைத் தமது மனைவியாக்கிவிட வேண்டு மென்ற மூர்த்தண்ணியமான பிடிவாதத்தோடு அவர் தமது மாளிகைக்கு வந்து சேர்ந்து, நேராக வெல்வெட்டு மாடத்திற்குப் போகாமல், சந்தடி இன்றி உள்ளே நுழைந்து ஷண்முக வடிவுக்குத் தெரியாத ஒர் அறைக்குப் போய் அவ்விடத்திலிருந்த

ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டு ஒரு வேலைக்காரியை

அழைத்து லீலாவதியும் ஷண்முகவடிவும் எங்கே இருக்கிறார்கள் என்றும் என்ன செய்து கொண்டிருக்கி றார்கள் என்றும்

வினவினார். லீலாவதியும் ஷண்முகவடிவும் தங்களுடைய

இராப்போஜனத்தை முடித்துக்கொண்டு அப்போதுதான் வெல்வெட்டு மாடத்துக்கு போனதாகவும், வுண்முகவடிவு

அவரது வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருப்பதாகவும் வேலைக்காரி மறுமொழி கூறினாள். தாம் வந்து அழைப்பதாக

ஷண்முகவடிவுக்குத் தெரியாமல் வேறே யாரோ அழைப்ப