பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 பூர்ணசந்திரோதயம் -4 உண்டாயிற்று. தான் அநாதரவாக ஒரு கொடிய கொள்ளைக் காரனிடம் அகப்பட்டுக் கொண்டிருப்பதாக அதுவரையில் அவள் எண்ணித்தளர்வடைந்திருக்க, அப்போது வந்தவன்.தனது புருஷனுக்கு அனுகூலமாக இருந்தவனும், அன்றையதினம் காலையில் தன்னிடம் வந்து ஒர் உதவி வேண்டியவனும், தன்னிடம் எப்போதும் மரியாதையாகவும் வணக்கமாகவும் நடந்து கொள்பவனுமான அண்ணாசாமி நாயக்கன் என்ற எண்ணம் உண்டாகவே, அவனைத் தான் எப்படியும் தனது வசப்படுத்தி தனது விஷயத்தில் அவன் எவ்வித அக்கிரமமும் செய்யாமல் தடுத்துவிடலாம் என்ற ஒரு நம்பிக்கையும் தைரியமும் அவளது மனதில் எழுந்தன.

அவள் நிரம்பவும் உற்சாகமும் ஊக்கமும் அடைந்தவளாய் நிமிர்ந்து உட்கார்ந்து, “ஐயா! என்ன ஆச்சரியம் இது? நீரா என்னை இங்கே தூக்கிக்கொண்டு வந்தது? நீரா என் பெரிய தகப்பனாரை நாற்காலியில் மாட்டியது? நீரா எங்களுடைய மாளிகையில் இரும்புப் பெட்டியிலிருந்த பொருள்களை எல்லாம் அபசரித்துக் கொண்டு வந்தது? இப்படி எல்லாம் செய்தது வேறு யாரோ திருடன் என்றல்லவா நினைத்தேன்’ என்றாள். கட்டாரித்தேவன் புன்னகை செய்து, ‘ஆம்; எல்லாக் காரியங்களையும் நான் தான் செய்தேன். ஏன்? இந்தக் காரியங்களை நான் செய்தது உனக்குச் சம்மதியாக இல்லையா? உனக்கு வேறே அன்னியனான திருடனிடம் இருக்கும் பிரியம் என்னிடம் இல்லாமல் போனதென்ன?’ என்றான்.

உடனே லீலாவதி, ‘ஐயா! நான் கேட்டதை நீர் இப்படித் தானா விபரீதமாக அர்த்தம் செய்கிறது? எங்கள் விஷயத்தில் எத்தனையோ அனுகூலங்கள் செய்தவரும், இன்று காலையில் என்னிடம் வந்து ஒரு உதவியை நாடியவருமான நீ இப்படிப்பட்ட காரியங்களைச் செய்ய எப்படித்துணிந்தீர் என்ற கருத்தோடு நான் கேட்டேனேயன்றி, வேறே திருடன் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்ய வேண்டுமென்று நான்