பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 பூர்ணசந்திரோதயம்-4

அதுகாறும் அவள் கேட்டறியாத புதுமையான அவனது வார்த்தைகளைக் கேட்டு அவள் திடுக்கிட்டு நடுங்கினாள். ‘ஐயா என்ன ஆச்சரியம் இது? இன்று காலையில் நீர் வந்து என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது எவ்வளவு மரியாதை யாகவும் பணிவாகவும் பேசினர் இப்போது முற்றிலும் அவ மரியாதையாகவும் பேசுகிறீர்! அதுவுமன்றி, நான் ஏதோ ஒரு மொட்டைக் கடிதம் எழுதி என் புருஷரைக் காட்டிக் கொடுத்ததாகச் சொல்லுகிறீர்? அப்படி நான் செய்தேன் என்பதை நீர் ருஜுப்படுத்த முடியுமா? அப்படியே இருந்தாலும், புருஷனுக்கும் பெண்சாதிக்கும் ஆயிரம் சண்டையிருக்கும்; ஒருவருக்கொருவர் எத்தனையோ கெடுதல்கள் செய்து கொள்வார்கள்; உடனே ஒன்றாகச் சேர்ந்துகொள்ளுவார்கள். அதையெல்லாம் ஒரு முகாந்திரமாக வைத்துக்கொண்டு நீர் இப்படிப்பட்ட கெட்ட காரியத்தில் இறங்கலாமா? போனது போகட்டும். இதுவரையில் நீர் செய்தவைகளை நான் மனசில் வைத்துப் பாராட்டமாட்டேன். என்னுடைய பெரிய தகப்பனார் விஷயத்தில் நீர் செய்ததைப் பற்றியும், எங்கள் வீட்டு ஐசுவரியத்தை எல்லாம் எடுத்து வந்ததைப் பற்றியும் நான் கொஞ்சமும் வருந்தமாட்டேன். நீர் தயை செய்து என்னை மாத்திரம் என்னுடைய ஜாகையில் கொண்டுபோய்ச் சேர்த்து விடும். உம்மைப்பற்றி நான் ஒரு வார்த்தைகூட என் பெரிய தகப்பனாரிடம் சொல்லுகிறதே இல்லை என்று நான் உமக்குப் பிரமாணம் செய்துகொடுக்கிறேன். அதுவுமன்றி, நீர் இன்று காலையில் என்னிடம் கேட்டுக் கொண்ட விஷயத்திலும் என்னாலான உதவியை நான் உமக்குச் செய்கிறேன். ஆகையால் என்னை நீர் உடனே கொண்டுபோய் என்னுடைய ஜாகையில் சேர்த்துவிடும் என்று நிரம்பவும் நயமாகவும், தாழ்மையாகவும் கேட்டுக்கொண்டாள்.

கட்டாரித்தேவன் விகாரமே வடிவாக அமைந்த கொடிய அரக்கனாக இருந்தான். ஆதலால், அவனது மன விகாரங்களும்,