பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 3O 1

சுகமாகப் படுத்துத் தூங்கு. இங்கே இருக்கும் பாட்டி என்னுடைய சொந்தக்காரி. இவள் உன்னை நிரம்பவும் சுகமாக வைத்திருப்பாள். நாளையதினம் ராத்திரி நான் ஒரு பெட்டி வண்டி கொண்டுவந்து அதில் உன்னை வைத்து அழைத்துக் கொண்டு போய் என்னுடைய சொந்த வீட்டில் சேர்க்கிறேன். அது மகாராஜனுடைய அரண்மனைபோல இருக்கும். நீ அங்கே ராஜாத்தி போல இருக்கலாம்’ என்று நயமாகக் கூறிய வண்ணம், அவள் உட்கார்ந்து கொண்டிருந்த விசிப்பலகையின் கடைசியில் வந்து மெதுவாக உட்கார்ந்து கொண்டு, அவளது சுந்தர வடிவத்தை உச்சிமுதல் உள்ளங்கால் வரையில் பன்முறை ஏற இறங்கப் பார்த்தான். அவனது பார்வை முற்றிலும் இளக்கமாகவும், கபடமாகவும் இருந்ததன்றி, அவள் விஷயத்தில் அவனது மனதில் கட்டுக்கடங்காத மோக வேட்கையும் தாகவிடாயும் பொங்கி எழுந்து அவனது உயிரைக் கருக்கிக் கொண்டிருந்தன என்பதை எளிதில் காட்டியது. அன்றையதினம் இரவிற்குள் அவளை எப்படியும் தான் அடைந்து விடலாம் என்ற ஒர் உறுதியை அவன் கொண்டிருந்தான் என்பதும், அவனது நிதானமான வார்த்தை களிலிருந்து எளிதில் தெரிந்தது. இன்பக் களஞ்சியமாக விளங்கிய அவளது ஒப்புயர்வற்ற ஒவ்வோர் அங்கத்தையும் அவன் பார்க்கும்போதே அவனது வாயில் ஆனந்த நீர் பெருகியது.

அவனது மன உறுதியையும் அவன் சொன்னவார்த்தைகளின் கருத்தையும் முடிவையும் கவனித்த லீலாவதி தான் அன்றைய தினம் அந்தக் கள்வனிடத்திலிருந்து நேரான வழியில் தப்பிப்போக முடியாதென்பதை உடனே உணர்ந்து கொண்டாள். அதுவுமன்றி, அவன் அன்றைய தினம் காலையில் தங்களுடைய மாளிகைக்கு வந்து தன்னோடு பேசிக்கொண்டிருந்த பிறகு உட்புறத்திலேயே ஒளிந்திருந்து தனக்கும் இன்ஸ்பெக்டருக்கும் நடந்த சம்பாஷணை முழுதையும் கேட்டுக்கொண்டிருந்திருக்க