பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 31 i கொள்ளவும், ஆகாரம் சாப்பிடவும் வராமல் முதல் கட்டிலேயே இருக்கமாட்டானென்றும் அவள் தீர்மானித்துக் கொண்டாள்; ஆகவே, அந்த வீட்டில் அப்போது அந்தக் கிழவி மாத்திரம் இருப்பதாக அவள் முடிவுசெய்து கொண்டாள். ஆனாலும், அவளுக்குச் சொந்தமான ஆண்பிள்ளைகள் யாராவது ஒருவேளை எங்கேயாவது போயிருந்து அன்றைய பகலில் அங்கே வந்தாலும் வரலாமென்ற ஒரு சந்தேகம் மாத்திரம் அவளது மனதில் உதித்துக்கொண்டே இருந்தது. கிழவி மாத்திரம் தனியாக இருப்பாளானால், தான் அவளைப் பலவந்தமாக விலக்கிக்கொண்டு வெளியில் போய்விடலா மென்ற இன்னொரு யோசனையும் அவளது மனதில் தோன்றியது. ஆனாலும், கிழவி முரட்டு மனுவியாதலால் அவளது பிடியிலிருந்து தான் தன்னை விடுவித்துக்கொண்டு போவது கடினமாக இருக்குமென்றும் அவள் அஞ்சினாள். அதுவுமன்றி, அவள் கூச்சலிட்டு பக்கத்திலுள்ள மனிதர்களை அழைத்தால், அப்படி வருகிறவர்கள் அவளுக்கு அனுகூலமான மனிதர்களாக இருந்தாலும் இருக்கலா மென்ற நினைவும் உண்டாயிற்று. அவ்வாறு லீலாவதி தனக்குள்ளாகவே பலவித ஆட்சேபணை சமாதானங்களை எண்ணிக்கொண்டவளாய், வெளிப்பார்வைக்குக் கபடமற்ற வளாகத் தோன்றி அவ்விடத்தில் தனது காலைக் கடமைகளை நிறைவேற்றிக் கொண்டவளாய்க் கிழவியோடு உட்புறம் வந்தாள். வந்தவள் மெதுவாக அவளோடு சம்பாஷிக்கத் தொடங்கினாள்.

லீலாவதி:- ஏன்பாட்டி நேற்று உன்னை அழைத்து வந்தாரே அவருக்கும் உங்களுக்கும் என்ன உறவு முறைமை?

கிழவி:- அவந்தான் என்னோடே பேராண்டி. எம்மவன் எறந்து போயி சானாவருசமாச்சு. அவன் வவுத்திலே பொறந்த வன் இவன் ஒருத்தன்தான். அந்த மாரியாத்தா கிருபெயினாலே சொகமா இருக்கிறான்.