பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 பூர்ணசந்திரோதயம்-4 அதைக்கேட்ட கிழவி, ‘இல்லேடியம்மா எம் பேராண்டி ரொம்ப பொல்லாதவன். அவன் சொன்னபடி நான் நடந்துக்காமப் போனா, எங்கொடலெப் புடுங்கிடுவான். அவன் சொன்னது நல்லதோ, கெட்டதோ சரியோ தப்போ அப்படியே நாம்ப சேஞ்சடனும். சேஞ்சுட்டா அவன் அப்புறம் நம்பகிட்ட குலாம்தான். நீ பயப்படாம இரு. பாக்கடிக்கிற நேரத்துலே வந்துட்றேன்’ என்று கூறினாள்.

அதைக் கேட்ட லீலாவதி அரைமனதோடு அதற்கு இணங்குகிறவள்போல நடித்து அதிருப்தியோடு மெளனம் சாதித்தாள். கிழவி உடனே அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு முதல் கட்டுக்கும் இரண்டாங் கட்டுக்கும் இடையிலிருந்த கதவை மூடி, அப்புறத்தில் பூட்டிக்கொண்டு மறைந்து போனாள். அதுவரையில் ஒன்றையும் அறியாத பேதை போலச் சோர்ந்து தளர்வுற்றுச் சாய்ந்திருந்த லீலாவதி மின்சார சக்தியினால் புத்துயிர் பெற்று எழுந்தவள் போலச்சட்க்கென்று எழுந்தாள். அவளது உடம்பு பரபரப்பும் சுறுசுறுப்புமே மயமாக மாறியது. எழுந்தவள் தனது கால்விரல்களைக் கீழே ஊன்றிய படி ஓசை செய்யாமல் கிழவி பூட்டிக்கொண்டு போன கதவண்டை போனாள். கிழவி ஒருகால் கதவைப் பூட்டிய பிறகு அப்புறத்தில் நின்று தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறாளோ என்ற சந்தேகமே லீலாவதியின் மனதில் உதித்தது. ஆகையால், தான் முதலில் அந்தச் சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள வேண்டுமென்ற நினைவோடு அவள் சந்தடி செய்யாது கதவண்டை போனாள். கதவு இரண்டு பலகைகளின் சேர்க்கை யினால் செய்யப்பட்டிருந்தது. ஆகையால், அதன்மேல் நீளமான நெருங்கிய இடைவெளி இருந்தது. ஒருகால் கிழவி அப்புறத்தில் நின்று அதன் வழியாகப் பார்க்கிறாளோ என்ற சந்தேகம் தோன்றியது. ஆகையால், லீலாவதி கீழே தரையோடு தரையாகப் படுத்தபடி தனது தலையை மாத்திரம் கதவின் அடியில் நீட்டிவிட்டு இடுக்கின் கீழ்பாகத்தில் மெதுவாகத் தனது