பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 315 கண்ணைக் கொண்டு போய் வைத்துக்கொண்டு அப்புறம் பார்த்தாள். வெளிச்சம் பளிச்சென்று அடித்ததனால் சிறிது நேரம் வரையில் கண்பார்வை மழுங்கிப் போயிருந்தது. பிறகு அப்பாலிருந்த வஸ்துக்கள் நன்றாகத் தெரிந்தன. கிழவி கதவிற்கு அப்பால் சிறிது நேரம் நின்று பார்த்துவிட்டு அப்போதே புறப்பட்டுப் போனது தெரிந்தது. தான் ஒசை செய்தால், கிழவி அதை உணர்ந்து சந்தேகப்பட்டு மறுபடியும் திரும் பி வருவாளோ என்று நினைத்து அஞ்சியவளாய் லீலாவதி தனது மூச்சைக்கூட பலமாய் விடாமல் ஒடுக்கி இருந்தபடி அப்பால் பார்த்துக் கொண்டிருந்தாள். கிழவி இரண்டாங் கட்டின் நடையைக் கடந்து முதல் கட்டின் முற்றத்தில் இறங்கி அதைக் கடந்து முதல் கட்டின் நடையை அடைந்ததை லீலாவதி கண்டாள். மேலும் இரண்டொரு விநாடிநேரம் கழிந்தது. கிழவி முன் வாசலைத் திறந்துகொண்டு வெளியில் போய்க் கதவை மறுபடி மூடியதையும் லீலாவதி கண்டாள்.

அதுவே தனது கருத்தை நிறைவேற்றிக் கொள்வதற்குச் சரியான சமயமென்று கண்ட லீலாவதி, உடனே அவ்விடத்தை விட்டெழுந்து மான்குட்டி துள்ளி ஒடுவதைப் போல ஒரே பாய்ச்சலில் இரண்டாங் கட்டின் முற்றத்திற்கு ஓடினாள். அவ்விடத்தில் ஒரு மூலையில் சொருகி வைக்கப்பட்டிருந்த ஏணியை விரைவாகவும் ஒசை செய்யாமலும் வெளியில் இழுத்து கொல்லைப் பக்கமாகக் கூரையில் சாற்றினாள்; கிழவி திரும்பி வந்தவுடனேஏணி கொல்லைப்பக்கத்தில் இருப்பதைக் கண்டு தான் கொல்லைப் பக்கமாகத் தப்பிப் போயிருக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டு அந்தப் பக்கம் போய்த் தேடட்டுமென்ற எண்ணத்தோடு அவள் ஏணியைக் கொல்லைப் பக்கமாகச் சார்த்திவிட்டு, இன்னொரு மூலையில் இருந்த ஒரு பெருத்த கூடையைக் கையில் எடுத்துக்கொண்டு சரசரவென்று ஏணியின் வழியாக மேலே ஏறிக் கூரைக்குப் போய்ச் சேர்ந்தாள். அங்கே போனவுடனே அவளது மனதில்