பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.18 பூர்ணசந்திரோதயம்-4 சந்தேகம் கொண்டு அப்புறம் இப்புறம் நகர்ந்து பார்ப்பாள். லீலாவதியின் உடம்பு அவளது திருஷ்டியில் அவசியம் பட்டிருக்கும். ஆகையால், கிழவி திரும்பிப் பார்க்காமல் போக வேண்டுமென்று அந்த மடந்தை சகலமான தெய்வங்களையும் நினைத்துப் பிரார்த்தனை செய்தவளாய்ப் படுத்திருந்தாள். அவளது இருதயம் தடதடவென்று அடித்துக்கொண்டது. தலை முதல் கால் வரையில் மயிர் சிலிர்த்து நிற்கிறது. வியர்வை வெள்ளமாக ஒழுகுகிறது. கை கால்களெல்லாம் வெட வெடவென்று நடுங்குகின்றன.

அந்த நிலைமையில் லீலாவதி ஒட்டின்மேல் இருக்க, அவள் அவ்வாறு தப்பிப் போக வழி தேடிக் கொண்டிருக்கிறாள் என்பதைப் பற்றி சிறிதும் சந்தேகியாத கிழவி பின்புறம் திரும்பிப் பார்க்காமல் முற்றத்தின் வ்ழியாகச் சென்று இரண்டாங் கட்டின் நடைக்குள் போய் விட்டாள். அவ்வாறு அவள் மறைந்துபோனதை உணர்ந்த லீலாவதியின் மனம் பலவகைப்பட்ட உணர்ச்சிகளினால் பொங்கி எழுந்தது. அடுத்த rணத்தில் கிழவி பூட்டை விலக்கிக் கதவைத் திறந்து கொண்டு அப்பால் நடந்தது தெரிந்தது. அதற்குமேல் தான் ஒர் இமைப் பொழுதுகூட அவ்விடத்தில் தாமதித்திருந்தால், பிறகு தான் தப்பிப் போவது சாத்தியமில்லாமல் போய் விடுமென்று நினைத்த லீலாவதி உடனே குபிரென்று அவ்விடத்தை விட்டெழுந்து, கூடையைக் கையில் எடுத்துக் கொண்டு இரண்டொரு பாய்ச்சலில் கூரையின் உச்சி மேட்டிற்குப் போய் அவ்விடத்திலிருந்து முன் பக்கத்துச் சரிவின்வழியாகக் கீழே இறங்கிக் கூரையின் அடி ஒரத்துக்கு வந்து சேர்ந்தாள். பூமியிலிருந்து அவளிருந்த இடம் ஒன்றரை ஆள் உயரத்திற்கு மேலே இருந்தது. ஆகையால், கீழே குனிந்து பார்க்கும் போதே, அவளுக்குக் குலைநடுக்கம் எடுத்தது. ஆனாலும், அவள் முற்றிலும் துணிந்து அதோடு தனது கைகால்கள் முறிந்து போனாலும் போகட்டும் என்ற மனோதிடத்தைக் கொண்ட