பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. 5 ஐயங்காள் - 3.19 வளாய்த் தனது கையிலிருந்த கூடையைக் கவிழ்த்த படி தரையில் விட்டெறிந்தாள். கூடை போய்க் கவிழ்ந்தபடி தரையில் உட்கார்ந்து கொண்டது. உடனே லீலாவதி அந்தக் கூடைக் குறிப்புப் பார்த்துத் தனது இரண்டு கால்களையும் ஒரே காலத்தில் தூக்கிக்கொண்டு கீழே குதித்தாள். அவளது குறி தவறாமல் அவளது கால்களிரண்டும் கூடையின்மேல் போய்ப் பதிந்தன. ஆனாலும், உடம்பின் மேல்பாகம் வேகத்தினால் முன்னால் கவிழ்ந்து போனது. அவள் தனது இரண்டு கைகளையும் ஊன்றிக்கொண்டு தரையில் குப்புற விழுந்தாள். ஆனாலும், அடியின் பெரும் பாகத்தையும் கூடை ஏற்றுக் கொண்டது. ஆகையால், அவளுக்கு அதிக துன்பமில்லாமல் போயிற்று. அவள் உடனே சரேலென்று எழுந்தாள்; கூடையை எடுத்து வீட்டின் திண்ணையில் எறிந்தாள்; அவ்விடத்தைவிட்டு சந்தின் வழியாக ஒட்டமும் நடையுமாகச் செல்லலானாள். அவள் சிறைவைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு எதிரில் மதில்களுள்ள ஒரு தோட்டமே இருந்தது. ஆகையால், அவள்கூரையிலிருந்து குதித்தது எவராலும் கவனிக்கப்படாமல் போயிற்று. அப்போது நடுப்பகல் வேளையாதலால், பக்கத்து வீட்டுக் கதவுகள் அநேகமாய் மூடப்பட்டிருந்தன. வெகு துரத்திற்கு அப்பால் யாரோ மனிதர் நின்று தத்தம் அலுவலைக் கவனித்துக் கொண்டிருந்தனர்..ஆகவே, லீலாவதி சிறிதும் அச்சமின்றி நிரம்பவும் துணிவடைந்து சந்தின் வழியாக விரைவில் நடந்து ஆட்டுமந்தைத் தெருவை அடைந்து சிறிது தூரம்செல்ல, அவ்விடத்தில் வாடகைக் குதிரைவண்டியொன்று நின்று கொண்டிருந்ததை அவள் கண்டு தனது கையைத் தட்டி அதற்குள்ளிருந்த வண்டிக்காரனை அழைக்க, அவன் வண்டியை ஒட்டிக்கொண்டு அவளிடம் நெருங்கி வந்தான். லீலாவதி அந்த வண்டியை வாடகைக்கு அமர்த்தி அதற்குள் ஏறி உட்கார்ந்து கொண்டு சீக்கிரமாக ஒட்டச்சொல்ல, வண்டி அதிசீக்கிரத்தில் ஒடி அந்தத் தெருவை விட்டு மறைந்துபோய்விட்டது. லீலாவதி பின்புறத்தில் பார்த்தபடியே சென்றாள். ஆதலால், கிழவியாவது usiv-2