பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32O பூர்ணசந்திரோதயம்-4 அவளது மனிதராவது தன்னைத் தொடர்ந்து வரவில்லை என்பது லீலாவதியின் மனதில் உறுதி ஆக ஆக அவளது கவலையும் கலக்கமும் குறைய ஆரம்பித்தன. அந்த மகா விபரீதமான கண்டத்திலிருந்துதான்தப்பிப் பிழைத்ததாக அவள் நிச்சயித்துக் கொண்டாள். அளவற்ற மகிழ்ச்சியும் குதுகலமும் அவளது மனதில் பொங்கியெழுந்தன. தன்னைப் பற்றிய அச்சமும் கவலையும் ஒருவாறு நீங்கவே, தனது பெரிய தகப்பனாரைப் பற்றிய நினைவும் கவலையும் உண்டாயின. முதல் நாளிரவில் விசை வைத்த நாற்காலியில் மாட்டிவிடப்பட்ட தனது பெரிய தந்தை அதிலிருந்து விடுபட்டாரோ அல்லது விடுபடாமல் அதுவரையில் நாற்காலியிலேயே இருந்து இறந்து போயாவது, அல்லது மூர்ச்சித்தாவது இருப்பாரோ என்ற நினைவு தோன்றி அவளை வதைக்கத் தொடங்கியது. ஷண்முகவடிவு இன்னமும் தங்களது மாளிகையில் இருக்கிறாளோ அல்லது அதைவிட்டுப் போயிருப்பாளோ என்றும், தானும் பெரிய தந்தையும் அவளது விஷயத்தில் செய்த அக்கிரமச் செய்கைகளை எல்லாம் அவள் ஒருவேளை வெளியிட்டிருப்பாளோ என்றும் அவள் பலவாறு எண்ணமிடலானாள். ஷண்முகவடிவு இருந்தாலும் இல்லா விட்டாலும், வேலைக்காரர்கள் கிழவரையும், தன்னையும் முதல்நாளிரவில் தேடாவிட்டாலும், மறுநாள் அந்நேரம் வரையில் எப்படியும், தேடியே இருப்பார்கள். ஆதலால், அவர்கள் கிழவரை எப்படியும் நாற்காலியிலிருந்து விடுவித்திருப்பார்கள் என்ற நிச்சயம் அவளது மனதில் ஏற்பட்டது. ஆகையால், தான் அவ்வளவு அவசரமாகத் தங்களது மாளிகைக்குப் போகவேண்டுமென்ற அவசியமில்லை என்ற எண்ணம் உண்டாகவே, அவளது மனதில் இன்னொரு யோசனை தோன்றியது. தன்னைக் கொண்டுபோய்ச் சிறைவைத்திருந்த முரட்டுத்திருடன் தன்னை அதோடு விடமாட்டான் என்றும் அவன் மறுபடியும் வந்து தன்னை அபகரித்துப்போக முயற்சிப்பான் என்றும் அந்த முயற்சி பலியாதபடி தான் எப்போதும் ஆள்களை பந்தோபஸ்தாக