பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 29 திருப்பி இருப்பேன். அநாவசியமாக ஒரு பகல் முழுதும் வீணாகப் போய்விட்டது. சரி; போனது போகட்டும், இப்போது நீ ஒரு காரியம் செய். இவ்விடத்தை விட்டு நீ நேராக அவளிடம் போய் மாரியம்மன் கோவிலிலிருந்து ஒர் ஆள் செய்தி கொண்டு வந்திருப்பதாகச் சொல். என்ன செய்தி என்றால், நான் இன்று காலையில் மாரியம்மன் கோவிலுக்குப் போகப் புறப்பட்ட காலத்தில் இளவரசர் அவசர காரியமாகத் தன்னைக் கூப்பிட்டு அனுப்பியதாகவும், நான் நேரில் அரண்மனைக்குப் போய் அவ்விடத்தில் நடத்தப்பட்ட ஒரு விருந்தில் சம்பந்தப் பட்டிருந்து பிற்பகல் மூன்று மணிக்கே இவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு மாரியம்மன் கோவிலுக்குப் போக நேர்ந்ததாகவும் போனவுடனே இவள் வந்திருக்கிறாள் என்ற செய்தியைக் கமலத்தினிடம் சொன்னதாகவும், அதைக் கேட்ட கமலம் கரை கடந்த சந்தோஷமும் பூரிப்பும் அடைந்ததன்றி, உடனே புறப்பட்டு வந்து இவளைப் பார்க்கப் பிரியப்பட்டதாகவும், அப்போது சாயுங்கால வேளை ஆகையால், இன்னமும் கொஞ்ச நேரமிருந்து இராத்திரிப் போஜனத்தை முடித்துக்கொண்டு போகலாம் என்று உன் அண்ணி சொன்னதாகவும், நான் அங்கேயே உன் அண்ணிக்குத் துணையாக இருப்பதாகவும், கமலம் மாத்திரம் வேலைக்காரர்களை அழைத்துக் கொண்டு ஒருபெட்டி வண்டியில் வந்து கொண்டிருக்கிறாள் என்றும், அவள் இன்னம் ஒரு நாழிகை நேரத்தில் இங்கே வந்து சேர்ந்து விடுவாள் என்றும் இப்போது வந்துள்ள ஆள் செய்தி கொண்டு வந்திருப்பதாகச் சொல். இந்த வரலாற்றைக் கேட்டவுடனே, அவள் தன்னுடைய அக்காளைதான் வெகு சீக்கிரத்தில் பார்க்கப் போவதாக எண்ணி நிரம் பவும் ஆனந்தமும் குதூகலமும் அடைந்து, அவளுடைய வருகையை ஆவலோடு எதிர்பார்த்தி ருப்பாள். நீயும் அவளோடு கூடவே இரு; இன்னும் ஒரு நாழிகை நேரத்தில் நான் இன்னொரு வேலைக்காரியை உங்களிடம் அனுப்புகிறேன். அவள் தடதடவென்று ஓடிவந்து உங்களைப் பார்த்து, ‘கமலத்தம் மாள் வந்துவிட்டார்கள்’ என்று