பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 பூர்ணசந்திரோதயம்-4 கண்ணுக்குக் கண்ணாகவும் அல்லவா பாவித்து வந்தேன். அவருடைய உடம்பில் ஒட்டிய ஒருதுசிக்குக்கூடத்துன்பம் நேர நான் சகித்திருக்க மாட்டேனே. அவருக்காக என்.பிராணனைத் கொடுக்கவும் நான் சம்மதிக்கக் கூடியவளாயிற்றே. அப்படியிருக்க, நான் அந்தக் கொடிய காரியத்தைச் செய்திருப்பேன் என்று யாராவது எண்ணமுடியுமா? அவரைப் போல இதோ இருக்கும் வடிவத்துக்கு எதிரிலும் எங்கும் நிறைந்துள்ள கடவுள் அறியவும் நான் பிரமாணமாகச் சொல்லுகிறேன். அவரை நான் கொல்லவே இல்லை. உங்கள் தகப்பனார் என்னுடைய மானத்தைக் காப்பாற்றுவதற்காகத் தம்மைத்தாமே கொன்று கொண்டார். என்றாள்.

நீலமேகம் பிள்ளை மிகுந்த கலக்கமும் கிலேசமும் அடைந்தவராய், ‘அம்மா நீங்கள் அவரைக் கொன்றிருப்பீர்கள் என்று நான் ஒருநாளும் சந்தேகப்பட்டதே இல்லை. என் தகப்பனாருக்கு வந்திருந்த சில கடிதங்களைப் படித்ததிலிருந்து அந்தக் கடிதங்களை எழுதிய ஸ்திரீ அவரை உயிருக்குயிராக மதித்திருந்ததாக நான் எளிதில் தெரிந்துகொண்டேன். .

ஆகவே, என் சந்தேகம் அந்த ஸ்திரீயின் மேல் ஏற்படவில்லை. அவளுடைய புருஷரால் ஒருவேளை என் தகப்பனாருக்கு மரணம் நேரிட்டிருக்குமோ என்பதே என் சந்தேகம். இப்போது நீங்கள் சொன்னதைக் கேட்டபிறகு அந்தச் சந்தேகமும் விலகிவிட்டது. அவர் தம்மைத்தாமே கொன்று கொண்டார் என்று நீங்கள் சொல்வதை நான் நம்புகிறேன். ஆனாலும், முழு விவரங்களையும் அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் என் மனசை வதைக்கிறது. அதைச் சொல்லும்படி நான் உங்களைக் கேட்டுக்கொள்வதைப் பற்றி நீங்கள் என்மேல் ஆயாசப்படக்கூடாது” என்றார்.

-லீலாவதி:- அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்காகத் தானே நான் இப்போது வந்திருக்கிறேன். அதைப்பற்றி நான்