பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“தேசபக்தன்’ எழுதி வெளியிட்டது:

பாலாமணி அல்லது பக்காத் திருடன்:- இது ஸ்ரீமான் வடுவூர் - கே. துரைஸாமி ஐயங்கார் அவர்கள், பி.ஏ., யால் வரையப்பெற்ற வினோதமான துப்பறியும் நாவல். இதில் தத்ரூபமாய்க் கண்ணெதிரில் நடப்பன போல விஷயங்களை வருணிக்கும் ஆற்றலும், விரிவான உலகானுபவ முதிர்ச்சியும், இதிற் பொதிந்துள்ள அருமை யான சம்பாஷணைகளின் நுட்ப விநயங்களும், இதில் தோன்றும் ஆண் பெண் பாலாரின் குணவொழுக் கங்களின் அற்புத அமைப்பும் பெரிதும் விரிவாய்ப் புகழற்குரியன. அற்புதமான குணவொழுக்கங்களைப் பெற்ற கேசவ முதலியார், நாகரத்தினம்மாள் முதலி யோரைக் கற்பனா சக்தியால் நிர்மாணம் செய்த அவ்வபார வல்லமையே பெரிதும் பாராட்டற்பாலது. கூளங்காளானது கொள்ளைக் கூட்டத்தார் புரிந்த கொள்ளை, கொலை முதலிய கொடிய செயல்களும், அவர்கள் பலவாறு உறுமாறிச் செல்லும் திறமையும், அவர்களைப் பிடிக்கும் பொருட்டு வந்த இன்ஸ்பெக்டர் ரஞ்சிட்சிங்கை அவர்கள் பன்முறை கொல்ல முயல்வதும், இறுதியாக அவர் பற்பல வேடந்தரித்துச் சென்று அவர்களைப்பற்றிச் சிறைப் படுத்துவதும் பெரிதும் அச்சத்தையும் வியப்பையும் ஈகின்றன. இக்கதை தொடக்கமுதல் இறுதிகாறும் படிப்போர் உள்ளத்தை மிகவெளிதிற் கவர்ந்து தேனொழுகச் செய்கின்றது.