பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 33 அவரது சொற்களைக்கேட்ட லீலாவதி அதற்கு மேலும் தான் மறுத்துப் பேசுவது சரியல்லவென்று எண்ணங்கொண்டு, சரி; உங்களுடைய இஷடப்படியே செய்கிறேன். ஆனால், நீங்கள் ஒரு காரியம் மாத்திரம் செய்யவேண்டும். இவளை அந்தக் கொடிய நாற்காலியில் அதிக நேரம் வைத்திருந்தால், இவள் அதன் சங்கடத்தைப் பொறுக்கமாட்டாமல் இறந்து போனாலும் போய்விடுவாள் ஆகையால், நான் அவளை அதில் மாட்ட வைத்து விட்டு வந்தவுடனே நீங்கள் போய் சீக்கிரமாக இவளை அதிலிருந்து விடுவிக்க வேண்டும். இவளுக்குக் கொஞ்சம் சூடு காட்டினால், அதுவே போதுமானது’ என்றாள்.

அதைக்கேட்ட ஜெமீந்தார், “சரி, அப்படியே செய்யலாம். நீ சீக்கிரம்போய் உன் வேலையைப் பார்’ என்றார். -

உடனே லீலாவதி அவ்விடத்தை விட்டு வெளியில் வந்து மேன்மாடப் படிகளில் ஏறி வெல்வெட்டு மாடத்திற்கு வந்து சேர்ந்து ஷண்முகவடிவு உட்கார்ந்திருந்த இடத்தை அடைந்தாள். நிரம்பவும் மிருதுத்தன்மையும், பரிசுத்தமும் நிறைந்தவளாக இருந்த அந்த வடிவழகியைத் தான் வஞ்சித்து, அவளைப் பெருந் துன்பத்தில் மாட்டிவிட வேண்டியிருக்கிறதே என்ற இரக்கமும் துயரமும் சங்கடமும் எழுந்து லீலாவதியினது மனதை வருத்தியது. ஆனாலும், தான் தனது பெரிய தகப்பனாரினது ஆதரவை இழந்துவிட்டால் தனக்கு வேறு புகலிடம் இல்லை என்ற எண்ணம் உண்டானது. ஆகையால், அவள் தனது இயற்கையான தயாளச் சிந்தனையை அடக்கிக் கொண்டு, ஜெமீந்தார் சொன்னபடி செய்யத் தீர்மானித்துக் கொண்டவளாய் நிரம்பவும் குதுகலமும் மகிழ்ச்சியும் தோற்றுவித்து, “ஷண்முக வடிவூ! காலையிலே திரும்பி வருவதாகச் சொல்லிவிட்டுப் போன என் தமயனார் இதுவரையில் வராத காரணம் இப்போது தான் தெரிகிறது. மாரியம்மன் கோவிலிலிருந்து ஒர் ஆள் வந்திருக்கிறான். இன்றைய தினம் இந்த ஊர் அரண்மனையில் இளவரசர் முக்கியமான சில பெரிய மனிதர்களுக்கெல்லாம்