பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 39

லீலாவதி, ‘'நீ பேசுவது நிரம் பவும் வேடிக்கையாக இருக்கிறது. இந்த ஊரில் யாரோ சில அயோக்கியர்கள் துன் மார்க்கமாக நடந்துகொண்டால், அதற்காக விட்டிற்குள் இருக்கும் குடும்ப ஸ்திரீகள் எல்லாரும் பயந்து கொண்டு ஊரைவிட்டு ஒடிப்போகிறதா? என் தமயனார் மகா சுத்தமான மனிதர். இளவரசர் செய்கிற காரியம் எதுவும் இவருடைய மனசுக்குப் பிடிக்கிறதே இல்லை. இருந்தாலும், அவர் ராஜ்ஜியத்தின் அரசராயிருப்பதால், அவர் விருந்துக்கு அழைப்பதை மறுத்து நேருக்கு நேர் கண்டித்து அவருடைய பகைமை சம்பாதித்துக் கொள்வது உசிதமல்ல என்று அங்கே போகிறார்கள். போனாலும், இவர் தூரத்திலிருந்தபடி காரியத்தை முடித்துக்கொண்டு வந்துவிடுவது வழக்கம். உன்னுடைய அக்காள் கமலம் இங்கே வந்தபின் வீட்டை விட்டு வெளியில் போனதே இல்லை. அரண்மனையில் நடக்கும் கெடுதல் எல்லாம் அவளுக்குத் தெரியவே தெரியாது. ஒர் ஊர் என்றிருந்தால், அதில் தாசிகளும் இருப்பார்கள்; வேசைகளும் இருப்பார்கள். அவர்கள் இருக்கும் இடத்தில்தான் பதிவிரதா ஸ்திரீகளும் இருந்து வாழவேண்டியிருக்கிறது. சிறிய கிராம மக்களில் மாத்திரம் எல்லோரும் பரம சுத்தர்களாக இருக்கறார்களா என்ன? அவ்விடத்திலும் கூடதுன்மார்க்கர்கள் அவசியம் இருக்கத்தான் இருப்பார்கள். இது எவ்வளவோ பெரிய பட்டணம். இந்த ராஜ்ஜியத்திலுள்ள எத்தனையோ ஊர்களிலிருந்து பணமும் சாமான்களும் இங்கே வந்து குவிகின்றன. அவைகளையெல்லாம் ஆண்டு அனுபவித்துத் தின்று கொழுத்து, வேலை இல்லாமல் திரியும் பெரிய மனிதர்கள் துன்மார்க்கத்தில் தங்கள் மனதைச் செலுத்தாமல் வேறு என்னதான் செய்யப் போகிறார்கள். இதெல்லாம் சகஜமாக நடக்கக்கூடிய விஷயமே. நீயும் நானும் கூடிக் கொண்டு இந்தத் துஷ்ட உலகத்தைச் சீர்திருத்தி நல்ல வழிக்குத் திருப்புவது என்றால் அது சாத்தியமான காரியமா? அவைகளை யெல்லாம் நாம் கண்ணால் பார்த்தும் பார்க்காமல், காதால்