பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பூர்ணசந்திரோதயம்-4 கேட்டும் கேட்காமல், நம்மை மாத்திரம் பத்திரமாகக் காப்பாற்றிக் கொண்டு போக வேண்டும். இந்த மாளிகை எவ்வளவோ அழகாக அலங்கரிக்கப் பட்டிருக்கிறது. விலை உயர்ந்த ஏராளமான விநோதப் பொருள்களே நிறைந்த இந்த மாளிகையிலும் இரண்டு இடுக்கு களில் தேள் முதலிய துஷ்ட ஜெந்துக்களும் இருந்து குடும்பம் நடத்திக்கொண்டுதான் இருக்கின்றன. நாம் எவ்வளவுதான் பிரயாசைபட்டாலும் அவைகளையெல்லாம் விலக்கவும் முடியாது. அவைகள் இல்லாத சுத்தமான இடத்தைக் காணவும் முடியாது’ என்றாள்.

அவ்வாறு அவள் பேசி முடித்த காலத்தில், ‘அம்மா அம்மா’ என்று ஆவலோடு கூவி அழைத்துக் கொண்டு ஒரு வேலைக்காரி அவ்விடத்துக்கு வந்து சேர்ந்தாள். அவள் வந்த மாதிரியைக் கண்ட லீலாவதியும், ஷண்முக வடிவும் திடுக்கிட்டுத் தங்களது சம்பாஷணையை அவ்வளவோடு நிறுத்திவிட்டு நிமிர்ந்து அவளை உற்று நோக்கினர்.

லீலாவதி அவளைப் பார்த்து, ‘என்ன விசேஷம் ?’ என்று ஆவலோடு கேட்க, அவள் ‘கமலத்தம்மாள் வந்துவிட்டார்கள்’ என்று நிரம்பவும் துடியாக மறுமொழி கூறினாள். அதைக்கேட்ட ஷண்முகவடிவு கட்டுக்கடங்கா ஆவலும், ஆனந்தப் பெருக்கும் அடைந்தவளாய்த்துடிதுடித்துத்துள்ளி எழுந்தாள். தான்.அடுத்த நிமிஷத்தில் தனது ஆருயிர்ச் சகோதரியைக் காண்போம் என்கிற எண்ணத்தினால் அந்த மடமங்கை மெய்மறந்து பரவசம் அடைந்து அது பூலோகமோஆகாசலோகமோ என்பது தெரியாத குழம்பிய நிலைமையை அடைந்து சுவர்க்கத்தின் வாசலி லிருந்து அதற்குள் நுழையப் போகிறவள் போல பிரமிப்பும், ஆவலுமே வடிவாக அப்படியே ஸ்தம்பித்து மந்திரசக்தியினால் கட்டுப்பட்டு நிற்கும் நாகம் போல நின்றாள். அவளைப் போலவே ஆவல் கொண்டு துள்ளியெழுந்த லீலாவதி வேலைக்காரியைப் பார்த்து, ‘கமலத்தம்மாள் வந்து விட்டார்களா? நிரம்பவும் சந்தோஷம். அவர்கள் நேராக