பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 41 இங்கேயே வருகிறார்களா? அல்லது எங்களைக் கீழே அழைத்து வரச் சொன்னார்களா?’ என்றாள்.

வேலைக்காரி, ‘அவர்கள் கையில் அம்மனுடைய பிரஸ்ாதம் கொஞ்சம் கொண்டுவந்திருக்கிறார்கள். தாம் நேராக அதைக் கொண்டுபோய் இரண்டாவது கட்டில் இருக்கும் சுவாமி அறையில் வைத்துவிட்டு அங்கேயிருக்கும் மெத்தைப் படிகளின் வழியாக ஏறி அவர்களுடைய அந்தப் புரத்துக்கு வருகிறார் களாம். நீங்கள் இந்த அம்மாளையும் அழைத்துக் கொண்டு இப்படியே பின்புறத்து வழியாக அவர்களுடைய அந்தப் புரத்துக்கு வந்து சேர்ந்து விடும்படி சொல்லச் சொன்னார்கள்’

என்று கூறினாள்.

உடனே லீலாவதி, ‘அப்படியானால் சரி: ஷண்முகவடிவூ! வா; நாம் இப்படியே போவோம்,கமலத்தினுடைய அந்தப்புரம் இதோ பக்கத்திலே தான் இருக்கிறது” என்று கூறியவண்ணம் அவ்விடத்திலிருந்து புறப்பட்டு பின்பக்கத்திலிருந்த வாசலை நோக்கி நடக்க, அவர்களது கபட நினைவைச் சிறிதும் உணராத நற்குணமணியானவுண்முகவடிவென்னும் இளந்தோகை தனது அக்காளைக் காண வேண்டும் என்ற பேராவலில் தனது நினைவு முழுவதையும் லயிக்க விடுத்தவளாய் லீலாவதியைப் பின்பற்றிச் செல்லலானாள்.

கமலம் வந்துவிட்டதாக அவர்களுக்குச் செய்தி சொல்லவந்த வேலைக்காரி தான் வந்த வழியாகவே திரும்பி நடந்து முன் வாசலைக் கடந்து அவ்விடத்திலிருந்த படிகளின் வழியாகக் கீழே இறங்கிப் போய்விட்டாள். லீலாவதி ஷண்முகவடிவை அழைத்துக் கொண்டு வெல் வெட்டு மாடத்தின் பின் புறத்திலிருந்த கண்ணாடிக் கதவைத் திறந்துகொண்டு அப்பால் சென்றாள். அவ்விடத்தில் ஜெமீந்தாரது பரம ரகசியமான ரதி கேளிவிலாசம் ஆரம்பமாயிற்று. ஆனால், அப்போது அவ்விடத்தில் ஒரு விளக்காகிலும் கொளுத்தப்படவில்லை. ஆகையால், எங்கும் இருளே மயமாக நிறைந்திருந்தது