பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 43 டைய அந்தப்புரம். அவள் இதோ பக்கத்திலிருக்கும் மெத்தைப் படிகளின் வழியாகக் கீழே இருந்து மேலே ஏறிவருவாள். வரும்போது இங்கே விளக்கில்லாமல் இருந்தால், அவளுக்கும் கஷ்டமாக இருக்கும். ஆகையால், நீ இந்த மேஜையின் பக்கத்திலிருக்கும் நாற்காலியின்மேல் உட்கார்ந்து கொள். இதோ ஒரு நிமிஷத்தில் நான் கீழே போய் வேலைக்காரனை அழைத்துக் கொண்டுவந்து விளக்கேற்றச் செய் கிறேன்’ என்றாள்.

அந்த வார்த்தையையும் உண்மை என்றே நம்பிய ஷண்முக வடிவு, ‘இல்லை நான் இப்படிநின்றுகொண்டே இருக்கிறேன். நீங்கள் போய்விட்டுச் சீக்கிரமாக வந்துவிடுங்கள் என்றாள்.

உடனே லீலாவதிதேன்போல இனிமையாகவும் நயமாகவும் பேசத் தொடங்கி, ‘ஏன் நீ அநாவசியமாக நிற்க வேண்டும்? இதோ அரை அடி தூரத்தில் சுகமான நாற்காலி நமக்காகப் போடப்பட்டிருக்கிறது; செளக்கியமாக உட்கார்ந்து கொள்ளாமல், எதற்காக நிற்கிறது? உன்னுடைய அக்காளும் என்னோடு வரப்போகிறாள். அவள் வந்து நீ நின்று கொண்டிருப்பதைப் பார்த்தால் நான் உனக்குச் சரியானபடி உபசரணை செய்யவில்லை என்று என்மேல் வருத்தப்பட்டுக் கொள்வாள். அதற்கெல்லாம் நாமேன் இடங்கொடுக்க வேண்டும் ‘ என்று நிரம் பவும் கவலையோடும் கமலம் கோபித்துக் கொள்வாளோ என்று பயந்து பேசுகிறவள் போலவும் கூறி மெதுவாகவும் அன்பாகவும் உரிமையோடும் அவளை நகர்த்த, ஷண்முகவடிவினது தொடைப் பக்கம் அவ்விடத்திலிருந்த ஒரு நாற்காலியின் மேல் உராய்ந்தது. அந்த அற்ப விஷயத்தில் லீலாவதி மிதமிஞ்சி தனக்கு உபசாரம் செய்தது ஷண்முகவடிவினது மனதிற்குப் புதுமையாகத் தோன்றியது. ஆனாலும், அவள் கமலத்தின் வாய்க்குப் பயந்தே அவ்வாறு உபசரணை செய்கிறாள் என்று எண்ணி, “சரி; நான் உட்கார்ந்து கொள்ளுகிறேன். உங்கள் மனசுக்குத்தான் ஏன்