பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பூர்ணசந்திரோதயம்-4 வருத்தம் கொடுக்க வேண்டும். நீங்கள் போய் அக்காளையும் வேலைக்காரனையும் அழைத்துக்கொண்டே வந்து விடுங்கள். அவ்விடத்திலேயே இருந்து ஏதாவது விளக்கை எடுத்துக் கொண்டு வருவதும் உசிதமாகத் தோன்றுகிறது” என்று கூறிய வண்ணம் மேஜையைப் பிடித்துக் கொண்டபடி மெதுவாக நடந்து அதன் பக்கத்தில் போடப்பட்டிருந்த நாற்காலியின் பக்கமாகப் போய் மேஜையைப் பார்த்தபடி, “சரி, உங்கள் பிரியப்படி நான் நாற்காலியில் இதோ உட்கார்ந்து கொள்ளுகிறேன். நீங்கள் சீக்கிரமாகப் போங்கள் என்றாள்.

உடனே லீலாவதி, சரி; நான் போய் உன் அக்காளையும் அழைத்துக்கொண்டு விளக்கோடு வருகிறேன்’ என்று கூறிய வண்ணம் சிறிது தூரம் அப்பால் நடந்து ஒசையின்றி நின்றுவிட்டாள். அடுத்த நிமிஷம் ஷண்முகவடிவு குனிந்து நாற்காலியின்மேல் உட்கார்ந்து கொண்டாள். அந்தத் சதிகார நாற்காலியில் மறைந்து கிடந்த விசைகள் உடனே சடக்கென்று கிளம்பி, அவளது இடுப்பையும், கைகளையும், கால்களையும் பலமாக நாற்காலியோடு நாற்காலியாகச் சேர்த்து இறுகப் பிடித்து அழுத்திக் கொண்டன. திடீரென்று தனது சரீரத்தில் இடிகள் வீழ்ந்ததை உணர்ந்தவள் போலப் பெரிதும் கலவரமடைந்து தன்னை முற்றிலும் மறந்த இளந்தோகையான ஷண்முகவடிவு, “ஐயோ! அம்மா! இது என்ன துன்பமோ தெரியவில்லையே ஐயோ! அம்மா இரும்பு வளையங்கள் இறுகப் பிடித்துக் கொண்டனவே! ஐயோ! மயக்கம் வருகிறதே! உயிர் போகிறதே!’ என்று ஓங்கி வீரிட்டுக் கூச்சலிட்டாள். அவளது மனதில் அபாரமான திகில் குடிகொண்டது. சிறிது தூரத்தில் இருளில் நின்றுகொண்டிருந்த லீலாவதி தான் நாற்காலியில் மாட்டிக் கொண்டவுடனே அவ்விடத்தைவிட்டு தடதடவென்று ஒட்டம் பிடித்துவந்த வழியாகவே திரும்பிப் போய்விட்டதையும் ஷண்முகவடிவு கண்டாள். அவள் ஒருகால் விளக்கை எடுத்துக்கொண்டு வருவதற்காகப் போயிருப்பாளோ