பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பூர்ணசந்திரோதயம் -4 னிடத்திலும் நிரம்பவும் அன்பாகவும் பட்சமாகவும் இருப்பவர்களும், தங்களுடைய குடும்பத்திற்கே சவரக்ஷணை கர்த்தாவாக இருப்பவர்களுமான அவர்கள் தனக்கு அப்படிப் பட்ட தீங்கிழைக்க நினைப் பார்களோ என்ற வியப்பும் அபாரமாகப் பெருகியது. லீலாவதி தனது தமயனாருக்குத் தெரியாமல் அப்படிச் செய்திருப்பாளோ, அல்லது, அவரது அனுமதியின் மேலேயே அப்படிச் செய்திருப்பாளோ என்ற சந்தேகமும் தோன்றியது. அவர்கள் என்ன கருத்தோடு தன்னை அவ்விடத்தில் சிறைப்படுத்தி இருப்பார்கள் என்றும் அவளது மனம் சிந்தித்தது. அவர்கள் செய்த அந்தக் கொடிய சதியாலோசனைக்குத் தனது அக்காளான கமலமும் இணங்கி இருப்பாளோ என்ற சந்தேகமே பெரியதாக எழுந்து மனதைப் புண்படுத்தியது. தனது அக்காள் சற்றுநேரத்தில் அவ்விடத்துக்கு வருவாள் என்று லீலாவதி சொன்னபடி கமலம் தன்னிடம் வருவாளோ, அல்லது, தனது அக்காள் மாரியம்மன் கோவிலிலிருந்து திரும்பி வரவே இல்லையோ என்ற சந்தேகமும் தோன்றியது. அப்படித் தனது அக்காள் மாரியம்மன் கோவிலிலிருந்து வராதிருந்தால், லீலாவதியும் அவளது தமயனாரும் சேர்ந்து கமலத்திற்குத் தெரியாமல் அவ்வாறு சதி செய்திருப்பார்களோ என்ற எண்ணமும் உண்டாயிற்று. லீலாவதி அன்றைய பகலில் தன்னிடத்தில் சம்பாஷித்திருந்த காலத்தில் சந்தேகாஸ் பதமான சில வார்த்தைகளைச் சொன்னதும் அப்போது நினைவிற்கு வந்தது. தான் கலியாண சுந்தரத்தை அடியோடு மறந்து சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றும், கிழவர் தன்னைப் பார்த்த முதல் தன் மீது அளவற்ற பிரியமும், வாஞ்சையும் கொண்டுவிட்டதால், தன்னையும் இனி இவ்விடத்திலேயே வைத்துக் கொள்ள இச்சைப்படுவதாகவும் சொன்ன வார்த்தைகளின் உட்கருத்து இன்னதென்பது அப்போதே உள்ளபடி ஒருவாறு விளங்கியது. அந்தக் கிழவர் தன்மீது ஏதோ துன்மார்க்கமான எண்ணம் கொண்டு அதை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு லீலாவதியைத் தூண்டி