பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 பூர்ணசந்திரோதயம்-4 கொள்ள இடமில்லாது இருந்தது. அவர் சோமசுந்தரம் பிள்ளை என்றும், அந்தப் பெண் அவரது தங்கையான கண்ணம்மாள் என்றும் அவள் முதன்முதலில் எண்ணிய எண்ணம் அப்படியே இருந்தது. ஆகையால், ஆதிகாலந் தொட்டுத் தங்களது குடும்பத்தைக் காப்பாற்றிவரும் பரமதயாளுவான மனிதரும், தனக் குப் பாட்டனார் முறைமையில் இருக்கத் தகுந்தவரும், தனது அக்காளைப் அபிமான புத்திரியாக ஏற்றுக் கொண்டு தமது சகலமான சம்பத்தையும் கொடுக்க இணங்கியிருப்பவரும், தனது அக்காளால் கடிதங்களில் பலவாறு ஸ்தோத்திரம் செய்யப்பட்டி ருந்தவருமான அந்தப் பெரிய மனிதர் தன் விஷயத்தில் துன்மார்க்கமான நினைவு கொள்வாரா; அல்லது, தன்னை அப்படிப்பட்ட கொடுமையான நாற்காலியில் மாட்டிவைக்க மனம்கொள்வாரா என்ற முக்கியமான கேள்வி எழுந்து தான் அவ்வாறு மாட்டிக் கொண்டிருப்பது கனவோ, அல்லது, நனவோ என்ற நினைவையே அப்போதும் உண்டாக்கியது.

அவ்வாறு அந்த அருங்குணமடமங்கை மட்டுக்கடங்காமனக் குழப்பமும், அபாரமான திகிலும், அடக்க வொண்ணாத கொடிய சஞ்சலமும் கொண்டவளாய் இரும்புப் பொறியில் கழுத்தைக் கொடுத்து, அகப்பட்டுக் கொண்ட எலிபோலத் தத்தளித்து வீரிட்டுக் கதறிப் பெருங் கூக்குரலிட்டவளாய் இருக்க,அந்த நாற்காலியின் விசைகள் அவளது கைகள், கால்கள், இடுப்பு ஆகிய மூன்று இடங்களையும் அழுத்தி ஒன்றுக்குப் பாதியாக ஒடுக்கி இரத்த ஒட்டத்தை நிறுத்தி, அந்தந்த இடங்களை அப்படி அப்படியே துண்டித்து விடுமோ என்று அஞ்சும்படி செய்தமையால், அவள் சித்திரவதைப்பட்டு நரக பாதை அனுபவித்தவளாய் இருக்க, கால் நாழிகை சாவகாசம் கழிந்தது. லீலாவதியாவது வேறு எவராவது அவ்விடத்தில் வந்ததாகத் தோன்றவில்லை. அவளது அங்கங்களில் இரும்பு வளையங்கள் அழுத்திப் பிடித்திருந்த இடங்கள் கொப்பளித்து வீங்கி அப்படியே நொந்து வீழ்ந்துவிடும் போலாகிவிட்டன.