பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 51

குடும்பத்தைச் சேர்ந்த அநாதைப் பெண்ணல்லவா? உங்கள் வயிற்றில் பிறந்த சொந்தப் பெண்ணுக்கும் எனக்கும் ஏதாவது பேதமுண்டா? அப்படி இருக்க, கொஞ்சமும் இரக்கமாவது தயாளமாவது இல்லாமல் என்னை இந்தக் கொடிய யந்திரத்தில் போட்டுச் சித்திரவதை செய்ய உங்களுடைய மனம் எப்படி இடம் கொடுத்ததோ தெரியவில்லையே! முதலில் நீங்கள் என்னை என்ன காரணத்தினால் இந்தக் கொடுரமான தண்டனைக்கு ஆளாக்கி னிர்களோ தெரியவில்லையே! உங்கள் விஷயத்தில் நான் மனசால் கூட அற்பமான அபசாரமும் செய்ததில்லை. நீங்கள் ஆதிகாலம் தொட்டு எங்களுடைய குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறீர்கள். அதன்பிறகு, என் அக்காளை உங்களுடைய சொந்த மகள்போல பாவித்து உங்களுடைய சகலமான சம்பத்தையும் அவளுக்கே கொடுப்பதாகச் சொல்லி அவளை ஆதரித்து வருகிறீர்கள். எங்களுக்கு ஒரு தகப்பனார் முறையில் இருந்து இதுவரையில் காப்பாற்றி வரும் உங்களை நான் உயிர்த் தெய்வம் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறேன். நற்குண நல்லொழுக்கத்தி லும், தயாளத்திலும், பிரபுத்துவத்திலும், செல்வத்திலும் செல்வாக்கி லும் உங்களைப் போன்றவர்கள் வேறு எவருமே இல்லை யென்று நான் உங்களைப் பற்றி நிரம் பவும் மதிப்பாகவும், பெருமையாகவும், நினைத்து அளவற்ற குதுகலமும் ஆனந்தமும் அடைந்திருக்கும் என்னை நீங்கள் இப்படிக் கொடுமையாகவும் இழிவாகவும் நடத்துவீர்கள் என்று நான் கனவிலும் எதிர்பார்க்கவே இல்லை. ஐயா! இன்னமும் உங்க ளுடைய மனம் இளகவில்லையா? என் கைகளும் கால்களும் இடுப்பும் அப்படியே துண்டு துண்டாக அறுந்து விழுந்து விடும் போல் இருக்கின்றன. என் உயிர் துடிக்கிறது. என்னைத் தண்டித்தது போதும், தயை செய்து என்னை விட்டுவிடுங்கள்’ என்று முற்றிலும் உருக்கமாகவும் கல்லும் கரைந்து உருகும்படியும் நயந்து கெஞ்சி மன்றாடிக் கண்ணிர் விடுத்தாள். -