பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 பூர்ணசந்திரோதயம்-4 அவளது துக்ககரமான சொற்களைக் கேட்டு சிறிதும் இரக்கமடையாத மருங்காபுரி ஜெமீந்தார், ‘பெண்ணே! என்னைப் பற்றி நீ நிரம்பவும் புகழ்ச்சியாகப் பேசியதைக் கேட்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நான் உங்கள் குடும்பத்துக்கு ஏராளமான உதவிகளைச் செய்தவன் என்பதை நீ உணர்ந்து நன்றி விசுவாசம் பாராட்டுவதைக் கேட்பதும் என் மனசுக்குத் திருப்திகரமாக இருக்கிறது. நான் எப்போதும் உங்களுடைய rேமத்தையே நாடுகிறவன் என்பதை நீ நன்றாக அறிந்திருக்கிறாய் என்றே நான் நிச்சயமாக நம்புகிறேன். இனியும் நான் உங்களுடைய நன்மையையே நாடுகிறவன் என்பதை நான் உனக்குச் சொல்லவேண்டியதே இல்லை ஆகையால், நான் உன்னுடைய நன்மையை நாடி ஒரு விஷயம் உன்னிடம் தெரிவிக்கப் போகிறேன். நீ எவ்வித ஆட்சேபனை யும் செய்யாமல் அதன்படி நடந்துகொள்வதாக ஒப்புக் கொண்டால், இதே நிமிஷத்தில் நான் உன்னை இந்த நாற்காலியி லிருந்து வெளிப்படுத்தி விடுகிறேன். இந்த பயங்கரமான நாற்காலியிலிருந்து உன்னை விடுவித்துக் கொள்வது உன் கையிலேயே இருக்கிறது. என்ன சொல்லுகிறாய்?” என்று கூறியவண்ணம் அவளண்டை முன்னிலும், அதிகமாக நெருங்கி வந்தார்.

அவர் பேசிய வார்த்தைகளின் உட்கருத்தை ஒருவாறு யூகித்து உணர்ந்துகொண்ட ஷண்முகவடிவு முன்னிலும் பதினாயிரம் மடங்கு கவலையும் கலக்கமும் பிரமிப்பும் அடைந்தவளாப் நடுநடுங்கி, ‘ஐயா என்ன இது! நீங்கள் சொல்லும் வார்த்தைகள் மகா விபரீதமான வார்த்தைகளாக இருக்கின்றனவே! என்னை இப்படி பலாத்காரம் செய்து ஏதோ ஓர் ஏற்பாட்டுக்கு நான் இணங்கும்படி செய்ய நீங்கள் முயற்சி செய்வதிலிருந்து, நீங்கள் பிரஸ்தாபிக்கப் போகும் விஷயம் நான் சுயேச்சையாக ஒப்புக்கொள்ளாத ஏதோ துர்மார்க்கமான விஷயம் எனத் தோன்றுகிறது. ஆகையால், அந்த விஷயம்