பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 53 இன்னதென்று உங்களிடம் கேட்கக் கூட நான் பிரியப்பட வில்லை. ஒரு விஷயம் தவறென்று நான் நினைத்து அதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று சொல்லுவேன். ஆனால்,

என்னை நீங்கள் பலாத்காரம் செய்தால் மாத்திரம் அதற்கு நான் இணங்கி விடுவேன் என்று நீங்கள் நினைத்துக் கொண்டீர்களா?

அது ஒரு நாளும் பலியாது. நீங்கள் என்னிடம் பிரஸ்தாபிக்கப்

போகும் விஷயம் ஒழுங்கானதாகவும் ஸ்திரீ தர்மத்துக்குப்

பங்கமில்லாததாகவும் இருந்தால் நான் அதைச் சாதாரண மாகவே செய்திருப்பேன். அதற்காக என்னைப் பலாத்காரம்

செய்யவேண்டும் என்பதே இல்லை. விஷயம் தகாததாக

இருந்தால் நான் இந்த நாற்காலியிலிருந்தபடி என் உயிரையே

விட்டாலும் விடுவேனே அன்றி என் மனசிலாவது,

வாக்கினாலாவது, காரியத்தினாலாவது அதற்கு ஒருப்பட

மாட்டேன்’ என்றாள்.

அதைக் கேட்ட மருங்காபுரி ஜெமீந்தார் புரளியாகவும் குறும் பாகவும் பேசத் தொடங்கி, ‘என்ன ஷண்முகவடிவூ! இவ்வளவு முறுக்காகப் பேசுகிறாய்! பார்வைக்கு நீ பரமஸாதுவாக இருக்கிறாய். மன உறுதியிலோகற்பாற்ைபோல இருக்கிறாயே! நீ எவ்வளவுதான் மனவுறுதி உடையவளாக இருந்தாலும் அதெல்லாம் என்னிடம் பலியாது. நீ என்னுடைய பிரியப்படி நடந்துகொண்டுதான் தீரவேண்டும். முதலில் இந்த வீட்டுக்கு வந்த காலத்தில் உன் அக்காளும் இப் படித்தான் முறுக்காகப் பேசினாள். அவளுடைய இறுமாப்பையும் இந்த நாற்காலியின் மூலமாகத்தான் அடக்கி அவளை வழிக்குக் கொண்டு வந்தேன். அவள் அதன்பிறகு என்னை விட்டுப்போகாமல் இங்கேயே இருந்துவிட்டாள். இத்தனை பெரிய செல்வத்தையும் அனுபவிக்க அனுபவிக்க, நான் போகச் சொன்னால் கூட அவள் என்னைவிட்டுப் போகமாட்டாள் போலிருக்கிறது. என்னிடத்தில் அவள் அந்தரங்கத்தில் என்ன விதமான முறைமையோடு இருந்து வருகிறாள் என்பதை