பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பூர்ணசந்திரோதயம்-4 அவள் உனக்கு இதுவரையில் தெரிவித்தே இருக்க மாட்டாள் என்று நினைக்கிறேன். அவள் அப்படி அடியோடு மாறிப் போயிருப்பதனாலேதான் மறுபடியும் திரும்பி உன்னிடம் வராமல் இங்கேயே இருந்துவிட்டாள். அதுபோல நீயும் இவ்விடத்திலேயே செளக்கியமாக இருந்துவிடு. உன்னுடைய அத்தையையும் இங்கேயே வரவழைத்து விடுவோம். எனக்கு இருக்கும் அபரிமிதமான செல்வங்களுக்கும் இந்த அரண்மனைக்கு நீயும் உன் அக்காளுமே வாரிசுதாரிகளாக இருந்து சுயேச்சையாக அனுபவித்துக் கொண்டிருக்கலாம். என்ன சொல்லுகிறாய் முடிவான வார்த்தையாகச் சொல்லி விடு; நீ அதிக நேரம் அந்த நாற்காலியில் இருப்பது எனக்கு ஸ்கிக்கவில்லை. உன் முடிவைத் தெரிந்து கொண்டு உடனே உன்னை வெளிப்படுத்துகிறேன்’ என்று நிரம்பவும் உருக்க மாகக் கூறினார்.

அதைக் கேட்ட ஷண்முகவடிவு, “ஆகா! அப்படியா சங்கதி: என்னுடைய அக்காளையும் நீங்கள் இந்த நாற்காலியில் மாட்டி அவளைக் கெடுத்தீர்களா அப்படியானால் நீங்கள் பரம யோக்கியர்கள் என்பதற்குச் சந்தேகமே இல்லை! நீங்கள் அவளை நாற்காலியில் மாட்டியிருப்பீர்கள் என்பது உண்மை யாக இருக்கலாம். ஆனால், என் அக்காள் சாதாரணமான மனிஷியல்ல. அவள் தன்னுடைய உயிரை விட்டாலும் விடுவாளே அன்றி, உங்களுடைய பலாத்காரத்துக்கு அடங்கி தகாத காரியத்துக்கு ஒருநாளும் இணங்கக் கூடியவளே அல்ல என்பது நிச்சயமான விஷயம். நீங்கள் கண்ணியமான மனிதர்கள் என்று நினைத்தல்லவா நான் இந்த வீட்டில் வந்து தங்கி விட்டேன். நீங்கள் இவ்வளவு கேவல புத்தியுடைய கெட்டுப் போன மனிதர்களென்பது எனக்குக் கொஞ்சமும் தெரியாமல் அல்லவா போய்விட்டது. உங்களுடைய தங்கை இன்றைய தினம் பகலில் என்னிடம் பேசிய சில வார்த்தைகளிலிருந்தே என் மனசில் உங்களைப் பற்றி ஒருவித சந்தேகம்