பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 பூர்ணசந்திரோதயம் -4 பிடித்தாலும் சரி; பிடிக்காவிட்டாலும் சரி; அந்தக் காரியத்தை நீங்கள் எனக்குச் செய்து கொடுத்தே தீரவேண்டும். அந்த உதவி உங்களால் ஆகக்கூடியதே ஆகையால், நீங்கள் அதை அவசியம் முடித்துக் கொடுத்தே தீரவேண்டும். உங்கள் புருஷரைக் காப்பாற்றுவதற்காக அன்றையதினம் நாம் எல்லோரும் கூடி இளவரசரைப் பிடித்துக்கொண்டு வந்து கடிதம் எழுதி வாங்கிக் கொண்டவிஷயம் உங்களுக்கு நினைவிருக்கலாம். அன்றைய தினம் முக்கியமாக நானும் என்னுடைய ஆட்களும் சேர்ந்து அவரைப் பிடித்துக் கொண்டு வராவிட்டால், நீங்கள் பார்சீ ஜாதிப் பெண்போல வேஷம் போட்டு அவரிடம் கடிதம் வாங்க முடிந்திருக்காது. உங்களுடைய புருஷர் நிஜமாகவே கொலைக் குற்றம் செய்தார் என்பது இந்த நாடெங்கும் நிச்சயமாகத் தெரிந்த விஷயம். வேறே யாராவது இப்படிப்பட்ட பெரிய குற்றம் செய்திருந்தால், அவருக்கு மரணதண்டனை கிடைப்பது நிச்சயம். இவருக்கும் மரண தண்டனை அவசியம் கிடைக்கும் என்றுதான் ஜனங்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள். நீங்கள் இளவரசரிடம் எழுதி வாங்கிக்கொண்டு வந்த கடிதத்தை உபயோகப்படுத்தி, அவருடைய உயிரைக் காப்பாற்றினர்கள் என்பது என்னைத் தவிர வேறே யாருக்கும் தெரியாது. நீங்கள் உதவி செய்திராவிட்டால், ஏழு வருஷக் கடின காவலோடு அவர் தப்பித்துக் கொண்டிருக்க மாட்டார் என்பது நிச்சயம். இந்த விஷயத்தில் எனக்கு மாத்திரம் கொஞ்சம் விசனந்தான். இவ்வளவுதூரம் கடிதம் எழுதி வாங்கிய நீங்கள், அதைச் சரியானபடி உபயோகித்து, உங்களுடைய புருஷர் எவ்வித தண்டனையும் அடையாமல் முழுதும் தப்பித்துக் கொண்டு உடனே வீட்டுக்கு வரும்படி செய்திருக்கலாம். இந்த விஷயத்தில் இளவரசர் உங்களை ஏமாற்றி விட்டார் என்றே நான் எண்ணுகிறேன். நீங்கள் இளவரசரிடத்தில் கண்டித்துப் பேசி இந்தக் காரியத்தை அவர் பூர்த்தியாக நிறைவேற்றிக் கொடுக்கும் படி செய்திருக்க