பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 பூர்ணசந்திரோதயம்-4 பலவிதமான ஸாகலங்கள் செய்து இரவு முழுதும் தன்னிடம் போராடிய ஸ்திரீ கடைசியில் அபிராமியாக மாறியதையும், அதே காலத்தில் போலீஸ் கமிஷனர், ஷண்முகவடிவு முதலியோர் அறையின்கதவைத்திறந்து கொண்டு வந்ததையும், தான் அபிராமியை நோக்கிக் கூறிய வார்த்தைகளுக்கு தான் கருதாத வேறு அர்த்தத்தைப் பாராக்காரன் உண்டுபண்ணிய தையும், அவனும் அபிராமியும் ஒரேவிதமாகப் பேசி, சகலமான குற்றங்களையும் தன்மீது சுமத்தியதையும், அதைக் கேட்ட ஷண்முகவடிவு மயங்கிக் கீழே வீழ்ந்ததையும் கண்ட கலியான சுந்தரம் அப்படியே பிரமித்து ஸ்தம்பித்து வாய் திறந்து பேச மாட்டாதவனாய் நிலைகலங்கி நின்று விட்டான். அவன் நிரம்பவும் கூர்மையான புத்தி வாய்ந்தவன் ஆதலால், உண்மை இன்னதுதான் என்பது உடனே அவனது மனதிற்குப் புலப்பட்டுவிட்டது. தன்னை அந்த ஊர்ச் சிறைச்சாலையில் அடைப்பதற்குக் காரண பூதர்களாக இருந்த தாதிப் பெண்கள் மூவரும் தன்னை அவ்வளவோடு விடாமல் மேன்மேலும் சதியாலோசனை செய்து, தன் மனதையும், தேக பரிசுத்தத் தையும் கெடுத்து, தனது கருத்து நிறைவேறாமல் செய்துவிட வேண்டும் என்ற உறுதியோடு, அந்த ஊர்ப் போலீஸ் கமிஷனரினது சிநேகத்தை எவ்வாறோ சம்பாதித்துக் கொண்டு அத்தகைய பல ஏற்பாடுகளையெல்லாம் செய்திருக்கிறார்கள் என்பது எளிதில் விளங்கியது. மூத்தவர்களான அம்மாளு, தனம் ஆகிய இருவரும் அதற்குமுன்தன்னிடம் பலவாறு சாகசக்கியம் செய்து பார்த்துத் தோற்றுப் போனமையால், அவர்கள் அப்போது அபிராமியை அனுப்பியிருக்கிறார்கள் என்பது நன்கு விளங்கியது. அவர்களது கருத்து இருவகைப்பட்டதென்பதும் எளிதில் தெரிந்தது. அவன் தனிமையாக அடைபட்டிருந்த இடத்தில் இருளில் தோன்றி, அதற்குமுன் பழகி அறியாத புது மனுஷிபோல நடித்து அவனது மனதை மயக்கிசாம, தான, பேத, தண்டம் என்ற சதுர்வித உபாயங்களையும் உபயோகப்படுத்தி எப்படியாவது அவனது ஏகபத்தினி விரதத்தைக் கெடுத்து