பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 63

அவனை வசப்படுத்திக்கொண்டு அதன்பிறகு தான் இன்னாள் என்பதை வெளியிட்டு அவன் பூனாவுக்குப் போகாமலும், இளவரசரது பட்டமகிஷியின் விஷயத்தில் தலையிடாமலும் செய்து விடவேண்டும் என்பது அவர்களது முக்கியமான கருத்து என்பதை அவன் உணர்ந்து கொண்டான். அந்தக் கருத்து நிறைவேறாவிடில் தனது ஆருயிர்க் காதலியான ஷண்முக வடிவைக் கொணர்ந்து காட்டி, தான் செய்தது எல்லாம் தவறு என்று அவள் எண்ணிக்கொள்ளும்படிசூழ்ச்சி செய்து விட்டால், தான் பூனாவுக்குப் போகாமல் ஷண்முகவடிவின் தப்பான எண்ணத்தை மாற்றி அவளது பிரியத்தை மறுபடியும் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவலோடு ஊருக்குத் திரும்பிப் போய்விடலாம். அல்லது, ஷண்முகவடிவை மறுபடியும் தான் அடைவது சாத்தியமில்லை என்பதைக் கண்டு, தான் அபிராமியினது நட்பை நாடலாம் என்ற கருத்தோடு அவர்கள் ஷண்முகவடிவினிடத்தில் ஏதோ விபரீதமான விஷயங்களைத் தெரிவித்து அவளை அந்த அசந்தர்ப்ப வேளையில் அழைத்து வந்திருக்க வேண்டும் என்பதும் அவனுக்கு உடனே விளங்கிவிட்டது. அந்தத் தாதிப் பெண்கள் தனது சகலமான வரலாறுகளையும், ஷண்முக வடிவின் இருப்பிடம் முதலிய விஷயங்களையும் அறிந்து நிரம்பவும் தந்திரமாகவும் சாமர்த்தியமாகவும் காரியங்களை நடத்தி இருக்கிறார்கள் என்ற எண்ணம் கலியாண சுந்தரத்தின் மனதில் உதித்தது. எல்லோரும் கோலாப்பூருக்கு வந்தபிறகு, தான் அம்மாளுவினிடத்தில் தனியாகப் பேசி, பட்டமகிஷியின் விஷயத்தில் அவர்கள் செய்துள்ள சதியாலோசனை நிறை வேறாமல் தடுப்பதற்காகவே தான் வந்திருப்பதாகக் கூறி, அவளது மனதை மாற்ற முயன்ற காலத்தில், அவள் மற்றவர் களுடன் கலந்து யோசித்துத்தங்களது முடிவைத் தெரிவிப்பதாக வாக்களித்துப் போனபிறகு அவளும் மற்றவர்களும் சேர்ந்து தஞ்சைக்குக் கடிதம் எழுதி, அவ்விடத்திலுள்ள மனிதரது முயற்சியால், கோலாப்பூர் போலீஸ் கமிஷனரினது நட்பையும் 9.8.IV-5