பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 65 முடிவாக இழந்து விட்டோம் என்றும், அவளுக்கும் தனக்கும் உள்ள சம்பந்தம் அன்றோடு தீர்ந்துபோய் விட்டது என்றும் அவன் எண்ணிவிட்டான். தான்.துன்மார்க்க நினைவும், துஷ்டச் செய்கையும், மூர்க்க குணமும் நிறைந்த காமாதுரன் என்று ஷண்முகவடிவு நினைத்துக் கொள்வாள் என்றும், அன்றோடு தனது மானம் அடியோடு அழிந்து போய்விட்டது என்றும் அவன் நிச்சயமாக எண்ணிக் கொண்டான். அந்த மகா விபரீதமான நிலைமையில் தான் ஷண்முகவடிவோடு பேசுவதா, அல்லது, என்ன செய்வது என்பதை உணராதவனாய் அவன் இரண்டொரு நிமிஷ நேரம் நிலைகலங்கி உடல் குன்றி அறிவு மயங்கி நிற்க, அந்தச்சமயத்தில் அவ்விடத்தில் தோன்றிய ஒரு வேலைக்காரி ஷண்முக வடிவைத்துக்கி எடுக்க முயன்றாள். தன்னுணர்வற்று மூர்ச்சித்து நிராதரவாகக் கிடந்ததனது ஆருயிர்க் காதலியை அன்னியர் தூக்கிக்கொண்டு போக முயன்றதைக் காண அவனுக்குச் சிறிதும் சகிக்கவில்லை ஆகையால், தான் போய் அவளைத்துக்கி எடுத்து மயக்கம் தெளிவிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு கலியாணசுந்தரம் தனது அறையைவிட்டு விரைவாக வெளியில் வர எத்தனிக்க, சற்று தூரத்தில் நின்றுகொண்டிருந்த அபிராமி என்ற தாதிப் பெண், சடேரென்று பின்னால் வந்து அவனைக் கட்டி இறுகப் பிடித்துக்கொண்டு, ‘எங்கே ஒடப் பார்க்கிறீர்கள்? இன்னொரு பெண்ணைப் பார்த்தவுடனே என்னுடைய ஞாபகமெல்லாம் மறந்து போய்விட்டதா? இவ்வளவு தூரம் என்னைக் கெடுத்துவிட்டு சுலபமாகத் தப்பித்துக் கொண்டு போய்விடப் பார்க்கிறீர்களா? எனக்கு வழி சொல்லிவிட்டுப் போங்கள். நான் உங்களை இலேசில் விட்டுவிடுவேன் என்று நினைத்துக் கொண்டீர்களா? இப்போது இங்கே வந்த பெண் உங்களுடைய பழைய சிநேகிதை போலிருக்கிறது. இப்போது என்னைக் கெடுத்தது போல நீங்கள் இன்னும் எத்தனைப் பேரைக் கெடுத்திருக்கி றீர்களோ தெரியவில்லையே! எப்படி இருந்தாலும் நான் உங்களை இனி விடவே போகிறதில்லை. எனக்கு நீங்கள்