பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 67 எங்கே கொண்டு போனார்கள் என்பதாவது கலியாண சுந்தரத்திற்குத் தெரியாமல் போய் விட்டது. அபிராமி முதலியோர் தன்மீது அபாண்டமான பழி சுமத்தியதையும், முடிவில் அவள் தன்னைப் பிடித்துக்கொண்டு தனக்கு வழி சொல்லவேண்டும் என்று வற்புறுத்தியதையும் கண்ட கலியான சுந்தரம் கட்டுக்கடங்கா வீராவேசமும், பதை பதைப்பும், வெட்கமும், துக்கமும் கொண்டவனாய் அந்த அரக்கியை அப்படியே குத்திக் கொன்று வீழ்த்தி விடவேண்டும் என்ற நினைவைக் கொண்டான். ஆனாலும், அவள் கேவலம் அபலையான ஒரு ஸ்திரீயென்ற எண்ணம் குறுக் கிட்டுப் போராட்டியது. ஆகையால், தான் அவளது தேகத்திற்கு எவ்விதமான தீங்கும் செய்வது ஆண்மைத்தனமல்ல என்ற நினைவினால், அவன் அரும்பாடுபட்டு தனது கடுஞ்சினத்தை அடக்கிக் கொண்டான். முற்றிலும் கட்டுக் கதையாகவும் அபாண்டமாகவும் பேசி மானம், லஜ்ஜை முதலிய சகலமான ஸ்திரீதர்மங்களையும் துறந்து கேவலம் மிருகம் போல நடந்து கொள்ளும் அந்தப் பெண்ணிடம் தான் வாக்குவாதம் செய்வது கண்ணியக்குறைவென்று அவனது மனம் நினைத்தது. ஆகவே, அவளது பிடியிலிருந்து தன்னை எப்படி விடுவித்துக் கொள்வது என்பதை அறியாதவனாப்ப் பெரிதும் கலங்கிக் குழம்பிப் பதைபதைத்து அசைவற்று நின்றான். அந்த நிலைமையில் சிறைச்சாலையின் அதிகாரியும் பாராக்காரர்களும் தனக்கு உதவி செய்யாமல், அந்தப் பெண்ணுக்கு அனுகூலமான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்துப்போனது அவனுக்கு ஆச்சரியத்திலும் பரம ஆச்சரியமாகத் தோன்றியது. அவன் ஒன்றும் தோன்றா தவனாய்க் கலக்கமும் குழப்பமுமே வடிவாக அப்படியே அரைக்கால் நாழிகை நேரம் நின்றான். அந்த இரவில் நெடு நேரமாக அவளோடு போராடியதாலும் திடீரென்று ஷண்முக வடிவைக் கண்டதாலும், அதன்பின்னர் நிகழ்ந்த விபரீத சம்பவங்களாலும் ஆரம்பம் முதல் அந்தம் வரையில் அவனது