பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 69 அவனது உடம்பு கிடுகிடென்று ஆடியது. ஆனாலும், அவள் தன்னை எப்படி விட்டுப் போனாள், எங்கே போனாள், மறுபடியும் திரும்பி வந்து விடுவாளோ என்பது போன்ற பல ஐயங்கள் அவனது மனதில் எழுந்து அவனைச் சஞ்சலத்தில் ஆழ்த்தின. அவன் தனக்கு அருகில் உட்கார்ந்திருந்த வைத்தியரிடத்தில் மிருதுவாகப் பேசத் தொடங்கி, தான் பத்து தினங்களாய் ஸ்மரணைதப்பி கடுமையான ஜூரநோய் கொண்டு பிதற்றிப் புரண்டு கொண்டிருந்ததாகவும், வைத்தியர் வேளைக்கு வேளை மருந்து கொடுத்துத் தனது ஜுரத்தை நிவர்த்தித்துப் பிரக்ஞையைத் தெளிவித்ததாகவும், அப்போதே தான் கண்களைத் திறந்து கொண்டு விழித்துப் பார்த்ததாகவும் தெரிந்துகொண்டான். அவன் உடனே ஷண்முகவடிவு எங்கே இருக்கிறாள் என்றும் என்ன நிலைமையில் இருக்கிறாள் என்றும் அறிய ஆவல் கொண்டு அந்த விவரங்களைப்பற்றி வைத்தியரிடம் கேட்க, அவர் தமக்கு அந்த விவரம் எதுவும் தெரியாது என்று சொல்லிவிட்டார்.

அதைக்கேட்டவுடனே அவனது மனம் நிரம்பவும் தவித்து வேதனையில் ஆழ்ந்தது. தனது ஆருயிர்க் காதலியான ஷண்முகவடிவு தன்னிடம் அருவருப்பும் கோபமும் அடைந்து தன்னை விலக்கிக் கைவிட்டிருப்பாளோ, அல்லது அவள் அப்போதும் தன்னிடம் பட்சம் மறவாதிருக்கிறாளோ என்ற எண்ணம் தோன்றி அவனது மனதில் பெருத்த ஏக்கமும் கலக்கமும் குடிகொள்ளச் செய்தன. அவள் தன்னிடம் வைத்திருந்த பழைய மதிப்பையும் வாஞ்சையையும் மறவாதிருப்பாள் ஆனால், தான் பத்து தினங்களாக நோய்கொண்டு ஸ்மரணை தப்பி இருப்பதை உணர்ந்து சும்மா இருக்க மாட்டாளென்றும் தனது உயிர் போவதானாலும் அதை இலட்சியம் செய்யாமல் அவள் இரவு பகல் தனக்கு அருகிலேயே இருந்து தன்னைக் காப்பாற்ற முயன்றிருப்பாள் என்றும் அவன் நினைத்தான். தான் நோய் கொண்டிருப்பதை