பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பூர்ணசந்திரோதயம்-4 அறிந்தும் அவள் தன்னைக் கைவிட்டு விட்டாளோ, அல்லது, அவளுக்குத் தனது உண்மையான நிலைமை இன்னதென்பது தெரிந்திருக்காதோ, அல்லது, அவள் அந்த ஊரை விட்டுப் புறப்பட்டுத் தனது சொந்த ஊருக்கே போய்விட்டாளோ என்று அவன் பலவாறு எண்ணமிட்டு ஏங்கினான். அவளது மனம் முற்றிலும் முறிந்து போவதற்குள் தான் அவளைக் கண்டு உண்மையான சங்கதிகளை எல்லாம் அவளிடம் தெரிவித்து அவளது மனதின் ஐயங்களை நிவர்த்திக்க வேண்டும் என்ற அவாவும் ஆவலும் அவனது மனதில் எழுந்து துடித்தன. ஆனாலும், அவளைப் பற்றிய விவரம் எதையும் தான் அறிந்துகொள்ள இயலாமல் இருந்ததும், தான் உடனே படுக்கையை விடுவித்து எழுந்து நடக்க இயலாமல் இருந்ததும் அவனை அளவற்றதுயரத்தில் ஆழ்த்தின. தான் நோய் கொண்டு படுத்திருந்த பத்து நாட்களில் என்றைக்காயினும் ஷண்முகவடிவு அவ்விடம் வந்து தன்னைப் பார்த்துவிட்டுப் போனாளோ என்று அவன் வைத்தியரிடம் கேட்க, அவர் அவ்விடத்தில் தம்மையும் தாதியையும் தவிர வேறு எவரும் வரவில்லை என்று சொல்லிவிட்டார். அதைக்கேட்ட நமது யெளவன வீரனது மனம் முன்னிலும் அதிகரித்த ஏக்கமும் கலக்கமும் கொண்டு ஆழ்ந்துபோனது. தானும் அபிராமியும் சிறைச்சாலைக்குள் தனியாக இருந்ததை ஷண்முகவடிவு கண்ட காலத்தில், அந்த விகாரக் காட்சியைக் காண மாட்டாமலும், தான் உண்மையில் துர்நடத்தையில் இறங்கிவிட்டதாக நினைத்தும் அந்த இள நங்கை கலங்கிக் குழம்பி ஸ்மரணைதப்பிக் கீழே வீழ்ந்தது அப்போதே கண்ணெதிரில் நிகழ்வதுபோல அவனது அகக் கண்ணில் புலனாகிக் கொண்டிருந்தது. அவள் ஒருகால் அப்படியே உயிர் துறந்திருப்பாளோ, அல்லது, அப்போதும் நோயாகப் படுத்திருப்பாளோ, அல்லது குணமடைந்து தனது ஊருக்கே போயிருப்பாளோ என்று அவன் பலவாறு சிந்தனை செய்தான். அந்தப் பத்து நாட்களில் அவளது மனம் எவ்வளவு தூரம் மாறிப் போயிருக்குமோ என்ற நினைவும் தோன்றி