பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர்கே.துரைசாமி ஐயங்கர் 71 வருத்தியது. தான் எப்படியாவது யாரிடத்திலாவது விசாரித்து ஷண்முக வடிவினது நிலைமை, அவள் இருக்குமிடம் முதலிய விவரங்களை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், அவளுக்கு ஒரு கடிதம் எழுதி கோலாப்பூருக்குத் தான் வந்த முதல் அதுவரையில் நிகழ்ந்த சகலமான விஷயங்களையும் அந்தக் கடிதத்தின் மூலமாக அவளுக்குத் தெரிவித்தால் அவள் எப்படியும் அவைகளை நம்பித் தன்மீது கொண்டுள்ள கெட்ட அபிப்பிராயத்தை மாற்றிவிடுவாள் என்று அவன் உறுதியாக எண்ணித் தனக்கு அருகிலிருந்த வைத்தியரை நோக்கி, “ஐயா! நீங்கள் இந்தப் பத்து தினங்களாக இராப்பகல் ஓயாமல் கட்டிக் காத்து என் உயிரை மீட்டிருப்பது எனக்கு நன்றாகத் தெரிகிறது. இப்படி என் உயிர் மீண்டதைப் பற்றி நான் உண்மையிலேயே ஆனந்தமடைந்து, என் மனமார்ந்த நன்றி விசுவாசத்தைத் தங்களுக்குச் செலுத்துவதே இயற்கையாக நடக்கக்கூடிய காரியம். ஆனால், என்னுடைய நிலைமை அப்படி இருக்க வில்லை. என்றைய தினம் நான் என்னுடைய பிரக்ஞையை இழந்து எமனுலகை நாடிப்போக ஆரம்பித்தேனோ, அப்போது முதல் என் விஷயத்தில் நீங்கள் கொஞ்சமும் பிரயாசை எடுத்துக் கொள்ளாமல், என்னை அப்படியே போட்டிருந்தால், இந்நேரம் என் உயிர் அடுத்த உலகத்துக்குப் போயிருக்கும். இந்த உலகத்துக்குரிய இடுக்கண்களும், துயரமும், கவலைகளும் அடியோடு ஒழிந்து போயிருக்கும். என்னுடைய பிறவிப் பிணியெல்லாம் சுத்தமாகத் தீர்ந்துபோயிருக்கும். நான் எவ்வித ஆசாபாசமும் இல்லாத நிரதிசய ஆனந்தத்தில் இந்நேரம் ஆழ்ந்திருப்பேன். நீங்கள் செய்த பேருதவியைப்பற்றி நான் அடுத்த உலகத்திலிருந்த படியே உங்களுக்கு நன்றியறிதல் செலுத்தியிருப்பேன். ஆனால், அது உங்களுக்குத் தெரியப் போகிறதில்லை. இப்போது நீங்கள் என்னை உயிர்ப்பித்தது என்னை உயிரோடு ஒரு பெருத்த நரகத்தில் தள்ளிவிட்டது போல இருக்கிறதேயன்றி வேறல்ல. என் விஷயத்தில் நன்மை செய்வதாக நீங்கள் கருதி என்னை உயிர்ப்பித்தீர்கள். ஆனாலும்,