பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 - பூர்ணசந்திரோதயம்-4 உங்களுக்குத் தெரியாமல், அது பெருத்த பொல்லாங்காகவே முடிந்தது. நான் நோயில் விழுந்த இந்தப் பத்து தினங்களுக்கு முன் ஒரு மாசகாலமாக நான் இவ்விடத்தில் சிறைச்சாலையில் இருந்ததும், என்னுடைய மற்ற வரலாறுகளும் உங்களுக்குத் தெரிந்திருக்காது என்றே நினைக்கிறேன். என்னுடைய உண்மையான வரலாறுகளையும் இங்கே இருப்பவர்கள் என் விஷயத்தில் எப்படிப்பட்ட அக்கிரமக்காரியங்கள் செய்திருக்கி றார்கள் என்பதையும் நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன். அவைகளை எல்லாம் அறிந்திருந்தால், நீங்கள் இப்போதிருப்பதைப் போல் இல்லாமல் வேறு மாதிரியாக நடந்து கொள்ளுவீர்கள்’ என்றான்.

அதைக்கேட்ட வைத்தியர், ‘ஐயா! நீங்கள் அதிகமாகப் பேசி உங்கள் உடம்பையும் மனசையும் அலட்டிக் கொள்ளக் கூடாது. இன்னமும் உங்களுடைய உடம்பு பலஹீனமாகவே இருக்கிறது. ஆகையால், நீங்கள் இன்னமும் சில தினங்கள் வரையில் வாயைத் திறந்து அதிகமாகப் பேசவே கூடாது. ஆகையால், சும்மா படுத்திருங்கள். நான் இந்தச் சிறைச்சாலையின் வைத்தியன். இவ்விடத்திலுள்ள மனிதர்களுக்கு ஏதேனும் தேகபாதை ஏற்பட்டால், அதை நிவர்த்திப்பது மாத்திரம் என் கடமை. அதைத் தவிர நான் அவர்களிடம் வேறு எவ்விதமான சம்பாஷணையும் வைத்துக் கொள்ளக்கூடாது. அவர்களுக்குத் தேவையான வேறு எவ்வித அனுகூலத்தையும் செய்யக்கூடாது. இந்தச் சிறைச்சாலையின் சட்டப்படி மற்றவர்கள் நடந்து கொள்வது போல நானும் நடந்து கொள்ளக் கடமைப்பட்டவன். அதுவுமன்றி, இங்கே அடைபட்டுள்ள கைதிகளின் வரலாறுகளையெல்லாம் நான் தெரிந்து கொள்ள எனக்கு எவ்வித மார்க்கமும் இல்லை. தெரிந்துகொள்ள முயற்சிப்பதும் சட்டவிரோதமானகாரியம். ஆகையால், எனக்கு உங்களுடைய வரலாறாவது, வேறு எந்தக் கைதியினுடைய வரலாறாவது தெரியவே தெரியாது. நீங்கள் எதைச்