பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 73 சொன்னாலும், அதற்கு நான் செவி கொடுக்கக்கூடாது. நான் இந்தப் போலீஸ் கமிஷனருடைய உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டியவன். ஆகையால், அவர் உங்கள் விஷயத்தில் ஏதேனும் அக்கிரமம் செய்திருந்தால் கூட, அதை நான் காதில் போட்டுக் கொள்ளக்கூடாது. ஆகையால், உங்களுக்கு எந்தக் காரியம் ஆகவேண்டியிருந்தாலும், அதை அந்தக் கமிஷனர் மூலமாகத்தான் செய்து கொள்ளவேண்டுமே அன்றி, என்னைப் போன்ற அற்ப சிப் பந்திகளால் நிறைவேற்றிக் கொள்ள முடியாது என்றார்.

அதைக்கேட்ட கலியாணசுந்தரம் முன்னிலும் பன்மடங்கு அதிகரித்த கவலையும் கலக்கமும் அடைந்தவனாய்ச் சோர்ந்து மயங்கிக் கண் மூடித் தலையணையில் சாய்ந்துவிட்டான். ஆனாலும், கால் நாழிகை நேரத்தில் மறுபடியும் கண்களைத் திறந்து பார்த்தான். ஷண்முக வடிவு அப்போது எங்கே இருக்கிறாள் என்பதையும் என்ன நிலைமையில் இருக்கிறாள் என்பதையும் தான் எப்படித் தெரிந்து கொள்வது என்ற கவலையே ஒயாக் கவலையாக அவனது மனத்திலிருந்து அவனை உலுப்பியது. தான் அந்த வரலாற்றை வைத்தியரிடத்தில் கேட்டுத் தெரிந்து கொள்வது சாத்தியமற்ற விஷயம் என்பது நன்றாகத் தெரிந்தது. போலீஸ் கமிஷனரோ எப்படிப்பட்ட அட்டுழியத்தையும் செய்யப் பின்வாங்காத கொடிய பாதகன். ஆதலால், அவனிடம் தான் கேட்டுத் தெரிந்து கொள்வதும் பலியாது எனத் தோன்றியது. அந்தப் பரம சங்கடமான நிலைமையில் தான் என்ன செய்வது என்பதை அறியாதவனாய் அவன்கலங்கித்தவித்தான். ஷண்முகவடிவின் நிலைமையைத் தான் தெரிந்து கொள்ள இயலாவிட்டாலும், பரம துஷ்டரான போலீஸ் கமிஷனரினால், அவளுக்கு எவ்வித இடரும் நேராமல் அவளைக் காப்பாற்றுவதே முதன்மையான காரியமாகத் தோன்றியது. ஆகையால், தான் எப்படியாவது முயற்சித்து, அங்கே நடந்த வரலாறுகளை எல்லாம் கண்டு ஒரு