பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 75 எழுதித் தருகிறேன். அதை மாத்திரம் நீங்கள் கொண்டுபோய்த் தபால் கச்சேரியில் சேர்த்து விடுவீர்க ளானால், அதுவே போதுமானது. அந்தப் பேருதவியை நான் என்றென்றைக்கும் மறக்கமாட்டேன். மாட்டேன் என்று சொல்லாமல் நீங்கள் எப்படியாவது எனக்கு இந்த உதவியை மாத்திரம் செய்தே தீரவேண்டும்’ என்று இறைஞ்சி வேண்டிக்கொண்டான்.

உடனே வைத்தியர் சிறிதும் இரக்கமின்றிப் பேசத் தொடங்கி, “ஐயா! நீங்கள் சொல்வதை நான் ஒப்புக் கொள்ள முடியாது. இங்கேயுள்ள ஒவ்வொரு கைதியும், தான் அக்ரமமாக தண்டிக்கப்பட்டு அடைபட்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறானே ஒழிய, தான் செய்த குற்றத்துக்கு இந்தத் தண்டனை அனுபவிப்பது நியாயம் என்று நினைப்பதே இல்லை. நான் எந்தக் கைதியினிடத்தில் பேசினாலும் அவன் தான் அநியாயமாகத் தண்டனை அனுபவிப்பதாகவே சொல்லி விசனப்படுகிறான். ஆகையால், எது உண்மை, எது பொய் என்பதை நான் கண்டுபிடிக்கக் கூடாமலிருக்கிறது. அப்படி இருப்பதால், நான் இங்கேயுள்ள கைதிகளின் விஷயங்களில் அநாவசியமாகத் தலையிட்டு மனசை வருத்திக் கொள்ளும் வழக்கத்தையே விட்டுவிட்டேன். சட்டப் படி தண்டனை அடைந்து இங்கே இருப்பவர்கள் நியாயப்படியே தான் தண்டிக்கப்பட்டிருப்பார்கள் என்று எண்ணிக் கொள்வதே என் மனசுக்கு நிம்மதியாக இருக்கிறது. உங்கள் விஷயத்தி லும் நான் அப்படியே தான் நினைத்துக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறேன். மனிதர் செய்யும் குற்றங்களை விசாரித்து அவரவருக்குரிய தண்டனையை ஏற்படுத்த சட்டப்படி நியாயாதிபதி ஒருவர் இருக்கிறார். சட்டமும் நியாயமும் ஒத்திருக்கின்றனவா என்று பார்க்கவேண்டிய கடமை நியாயாதிபதியைச் சேர்ந்ததே அன்றி என்னைச் சேர்ந்ததல்ல. உங்கள் விஷயத்தில் நியாய விரோதம் ஏதாவது ஏற்பட்டிருந்தால், அந்தப் பாவம் நியாயாதிபதியைத்தான்