பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 பூர்ணசந்திரோதயம்-4 முடியாத காரியம். என்னுடைய புருஷர் செய்த உபத்திர வத்துக்குக் கட்டுப்பட்டு நான் பார்சீஜாதிப் பெண்ணாக வேஷம்போட்டு அந்தக் கடிதத்தை எழுதி வாங்கினேனே ஒழிய நான் என் மனப்பூர்வமாக இணங்கி அந்தக் காரியத்தில் இறங்கவில்லை. அன்னிய புருஷரான இளவரசரிடத்தில் பெண்பிள்ளையான நான் போய் எந்த உதவியையும் கேட்பது அடுக்குமா? நான் அந்தக் கடிதத்தை வாங்கினேனே ஒழிய, நான் மறுபடி அவரிடம் நேரில் போகவும் இல்லை; அந்தக் கடிதத்தை உபயோகப்படுத்தவும் இல்லை. நான் என் பெரிய தகப்பனாரை இளவரசரிடம் அனுப்பி என் புருஷருக்கு உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டேன். அவர் எவ்வித உதவியும் செய்யத் தம்மால் இயலாது என்று கண்டிப்பாகச் சொல்லி மறுத்து விட்டார். அதன்பிறகு நாங்கள் வக்கீல் வைத்து வாதாடி அவருக்குச் சொற்பமான தண்டனை ஏற்படும்படி செய்தோம். அவ்வளவுதான் வரலாறு. எனக்கும் இளவரசருக்கும் அதன் பிறகு பழக்கம் ஏற்படவே இல்லை. இனி அவருடைய முகத்தில் விழிக்க எனக்குக் கொஞ்சமும் இஷ்டமில்லை ஆகையால், நீர் கோரும் விஷயத்தில் என்னால் எவ்வித உதவியும் செய்ய முடியாது ஆகையால், நீர் போகலாம்’ என்றாள்.

கட்டாரித்தேவன் அவள் சொன்ன வரலாற்றைச் சிறிதும் நம்பாதவன்போலக் குறும்பாகப் பேசத் தொடங்கி, ‘என்ன அம்மா இப்படிப் பேசுகிறீர்கள்? இளவரசர் வசமாக எழுதிக் கொடுத்திருந்த அந்தக் கடிதத்தை நீங்கள் உபயோகப்படுத்திக் கொள்ளவில்லையென்றால் யார்தான் நம்புவார்கள்? இது கேழ்வரகில் நெய் ஒழுகுகிறது என்னும் கதைபோல் இருக்கிறது. அப்படியே நீங்கள் அந்தக் கடிதத்தை உபயோகப்படுத்திக் கொள்ள வில்லையென்றே வைத்துக்கொள்வோம். அப்படி இருந்தாலும், உங்கள் பெரிய தகப்பனாருக்கும் இளவரசருக்கும் அந்தரங்கமான சிநேகமுண்டு என்பது எனக்குத் தெரியாதா? இவர் சொன்னால் அவர் அதை மீறி நடப்பாரா? ஒரு நாளும்