பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 . பூர்ணசந்திரோதயம்-4 சேருமேயன்றி என்னைப் போன்ற துணைக்கருவிகளைச் சேராது. ஆகையால் இனி நீங்கள் வைத்திய விஷயத்தைத் தவிர வேறு எந்த விஷயத்திலும் என் உதவியை நாடமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். நான் சொல்வதைக் கேளாமல் நீங்கள் சொல்வதையே திரும்பத் திரும்பச்சொல்லி வற்புறுத்துவீர்களா னால், அதை நான் போலீஸ் கமிஷனரிடம் தெரிவிப்பதைத் தவிர வேறு எந்தப் பலனும் ஏற்படாது என்று நீர் நிச்சயமாக எண்ணிக்கொள்ளலாம்’ என்று கூறினார். -

அவர் அழுத்தமாகவும் நிதானமாகவும் பேசியதைக் கண்ட கலியாணசுந்தரம் அந்த மனிதரது மனதை மாற்றத் தன்னால் இயலாது என்றும், அவர் எதற்கும் இளகாத கடின மனது உடையவர் என்றும், தான் எவ்வளவு தூரம் முயற்சித்தாலும் அவரால் தனக்கு எவ்வித அனுகூலமும் ஏற்படாது என்றும் உணர்ந்து கொண்டான், ஈசுவரன் இந்த உலகில் pவ காருண்யமாவது பச்சாதாபமாவது இல்லாத, அப்படிப்பட்ட மனிதரையும் படைத்திருக்கிறானே என்ற வியப்பும் விசனமும் எழுந்து கலியாணசுந்தரத்தின் மனதைக் கப்பிக் கொண்டன. அவன் அவரைப் பார்த்து, ‘சரி, பிறகு உங்கள் இஷ்டம். இதற்கு மேல் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை’ என்று சுருக்கமாக இரண்டொரு வார்த்தைகளில் அவருக்கு மறுமொழி சொல்லிவிட்டு ஒய்ந்து மெளனமாகப் படுத்துக் கொண்டான்.

அதன்பிறகு அவனுக்கும் அந்த வைத்தியருக்கும் எவ்வித சம்பாஷணையும் நடக்காமல் நின்றுபோய்விட்டது. அதுகாறும் அவனுக்கு அருகிலேயே சதாகாலமும் இருந்துவந்த வைத்தியர் அவன் அநேகமாய்க் குணமடைந்து போனதைக் கண்டு காலை மாலைகளில் மாத்திரம் வந்து மருந்துகள் கொடுத்துவிட்டுப் போகத் தொடங்கினார். அவர் வரும்போது அவருடன் கூட முன்னர் குறிக்கப்பட்ட ஒரு தாதியும் வந்து அவனுக்குரிய பணிவிடைகளைச் செய்துவிட்டுப் போய்க் கொண்டிருந்தாள். இடையிடையில் அந்தத் தாதி அவனிருந்த இடத்திற்கு வந்து