பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 பூர்ணசந்திரோதயம்-4 கடிதம் எழுதலாமா எழுதக் கூடாதா என்பதையும், தான் அந்தச் சிறைச்சாலையில் இன்னம் எவ்வளவு காலத்திற்கு இருக்க வேண்டும் என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற அவாவும் ஆவலும் எழுந்து தீப்பற்றி எரிவது போல அவனது மனதையும் தேகத்தையும் பற்றி எரித்தன. ஆனாலும், அந்த விவரங்களை யார் மூலமாக அறிகிறது என்பதை அறியாமல் அவன் ஏங்கிக் கலங்கி ஆராத்துயரில் ஆழ்ந்து துரும்புபோல மெலிந்து போனான். வைத்தியர் கொடுத்த மருந்திலாவது, ஆகாரத்திலாவது நித்திரையிலாவது அவனது மனம் செல்லவே இல்லை. பொழுதுவிடிந்தால், பொழுதுபோனால், அந்தத் தாதியின் உயிரற்ற முகத்தைத்தவிர வேறு எந்த முகத்தையும் தான் பார்க்க இயலாமல் போனதை நினைத்து நினைத்து அவன் மனமாழ்கிப் புண்பட்டு வருந்திக் கிடந்தான். இரண்டொரு சமயங்களில் அந்தத் தாதியின் முகம் கடுமையற்றதாகத் தோன்றினபோது தான் அவளிடம் சம்பாஷித்துப் பார்க்கலாமா என்ற ஒருவித விருப்பம் அவனது மனதில் எழுந்தது. ஆனாலும், தான் அப்படிச் செய்வதில் தனக்கு எவ்வித அனுகூலமும் ஏற்படாது என்ற ஒர் எண்ணம் தோன்றி அவனைப் பின்னிடும் படி செய்தது. ஆகவே, அவன் அவளிடத்தில் வார்த்தையே சொல்லாமல் மெளனமாகவே இருந்து வந்தான்.

அப்படியிருக்க ஒரு நாள் பகலில் அவன் மனவேதனையில் பட்டு அலுத்துக் கடுமையான நித்திரையில் ஆழ்ந்து விழித்து பிற்பகல் மூன்று மணிக்கு எழுந்து தனது படுக்கையைச் சுருட்டி வைத்துவிட்டு விசிப்பலகையின் மீது உட்கார்ந்துகொண்டு எதையோ சிந்தித்த வண்ணம் இருந்தான். அவனுக்கு எதிரிலி ருந்த ஜன்னலின் கதவுகள் திறந்து வைக்கப்பட்டிருந்தன. அந்த ஜன்னலிற்கு அப்புறத்தில் ஒரு தாழ்வாரம் இருந்தது. கலியான சுந்தரம் தனது முகத்தை அந்த ஜன்னலின் பக்கம் திருப்பியபடி தனது கவனத்தையும் திருஷ்டியையும் வேறிடத்தில் வைத்துக் கொண்டிருக்க, திடீரென்று தாழ்வாரத் தில் ஜன்னலுக்குப் பக்கத்தில் மறைந்திருந்தபடி யாரோ ஒரு மனிதர் தனது கையை